தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு தனி இணையதளம் கோரி வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு தனி இணையதளம் கோரி வழக்கு

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சென்னை, :அரசு துறைகளின் தகவல்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறும் வகையில், இணையதளத்தை ஏற்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருச்சியைச் சேர்ந்த, முகமது காதர் மீரான் என்பவர் தாக்கல் செய்த மனு:தகவல் பெறும் உரிமை சட்டத்தில், அரசின் தகவல்களை பெற, மஹாராஷ்டிர அரசு, இணையதளத்தை ஏற்படுத்தி உள்ளது.'ஆன்லைன்'இதே போல், இணையதளத்தை ஏற்படுத்த, நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவது குறித்து, மத்திய அரசிடம் விசாரித்த போது, அப்படி எதுவும் வழங்கப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டது. இதற்காக, எந்த மாநில அரசும், மத்திய அரசை அணுகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இணையதளத்தை ஏற்படுத்த, மென்பொருள் போன்ற தொழில்நுட்ப உதவியை, மாநில அரசுகளுக்கு வழங்கும்படி, தேசிய தகவல் மையத்திடம், மத்திய அரசு கேட்டுள்ளது.
எனவே, தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி, 'ஆன்லைன்' வாயிலாக தகவல் பெறுவதற்கான இணையதளத்தை ஏற்படுத்த,தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விசாரணைமனு, நீதிபதிகள்,சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்'முன், விசாரணைக்குவந்தது.
மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசு பிளீடர்,எம்.கே.சுப்ரமணியம்மற்றும் மத்திய அரசுவழக்கறிஞருக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, செப்., 4க்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை