'ரேஷன் உணவு பொருட்களை விட்டுக்கொடு'; மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ரேஷன் உணவு பொருட்களை விட்டுக்கொடு'
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

ரேஷனில் வழங்கும் பொருட்களை, விருப்பத் தின் அடிப்படையில், அரசுக்கு விட்டு கொடுக்கு மாறு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

ரேஷன்,உணவு, மக்கள், விழிப்புணர்வு,ஏற்படுத்த ,முடிவு

குறைந்த விலைதமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவை, குறைந்த விலையிலும் விற்கப்படு கின்றன.இவற்றுக்காக,தமிழக அரசு ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலர், அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளனர். தற்போது, அவர்களின் கார்டுகள், 'முன்னுரிமை அல்லா தது' என்ற பிரிவில் வந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் பொருட்கள் வாங்கலாம்.ஏழை மக்கள் பயனடையும் வகையில், வசதியானவர் கள், சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு, வசதியானவர்களிடம், மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

அதை ஏற்று, மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட் டோர்,'காஸ் மானியம் வேண்டாம்' என, விட்டு

கொடுக்கின்றனர்.அவர்களின் வங்கி கணக்கில், மானியத் தொகை செலுத்தப்படுவதில்லை. அதே போல், ரேஷன் பொருட்களை விட்டுக் கொடுப்பதற் கான நடவடிக்கையை, உணவுத் துறை துவக்கியுள் ளது; ஆனால், அது குறித்த விபரம் மக்களிடம் சென்றடைய வில்லை.

வாங்குவதில்லை


உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மக்களின் வருமானத்தின் அடிப்படையில், அரிசி, சர்க்கரை கார்டுகள் வழங்கப்பட்டன. தற்போது, 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாத' என, ரேஷன் கார்டு பிரிக்கப்பட்டா லும், ஏற்கனவே உள்ள கார்டுகளுக்கு ஏற்ப, பொருட்கள் தரப்படுகின்றன. வசதியானவர்கள், ரேஷன் பொருட்களை வாங்குவ தில்லை. வீட்டில் வேலை செய்பவர்களிடம் கார்டை கொடுத்து, பொருட்கள் வாங்கி கொள்ளுமாறு கூறுகின்றனர். அவர்கள், தங்கள் கார்டுக்கு வாங்கும் பொருட்களை வீட்டில் பயன்படுத்தி, உரிமையாள ரின் கார்டுக்கு வாங்கும் பொருட்களை, கடைகளில் அதிக விலைக்கு விற்கின்றனர்.

மிச்சமாகும் பொருட்களை, வாங்கியது போல் பதிவு செய்யும் ரேஷன் ஊழியர்கள், அவற்றை வெளிச் சந்தையில் விற்கின்றனர்.எனவே, ரேஷன் பொருட் கள், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, வேண்டாம் என விரும்புபவர்கள், பொது வினியோக திட்டஇணையதளம் அல்லது 'மொபைல் ஆப்' வாயி லாக, அந்த விபரத்தை பதிவு செய்யலாம்.

அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பொருட்கள் ரத்து செய்யப்பட்டு, கடைகளுக்கும் அவை அனுப்பப் படாது. இதனால், ரேஷன் கடை களில், தவறுகள் நடக்காது; அரசுக்கு செலவும் குறையும். இது

Advertisement

குறித்து, ரேஷன் கடைகளில்சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரத்து இல்லை என கூறிய அமைச்சர் ரேஷன் பொருட்கள் ரத்து தொடர்பான செய்தி, சமீபத் தில் வெளியான போது, சென்னை, தலைமை செயலகத்தில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ்,சமீபத்தில் அளித்த பேட்டி:தமிழகம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் இணைந்தாலும், அனைவருக்கும் ரேஷன் கடைகளில் வழக்கம் போல் பொருட்கள் வழங்கப்படும்; அதில், எந்த மாற்றமும் இல்லை.

ரேஷன் பொருட்கள் ரத்து என்பது வதந்தி. தற் போது உள்ள பொது வினியோக திட்ட முறை தொடரும்.மாநில அரசு,சொந்த நிதியில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ்,பருப்பு, பாமாயில் வழங்கி வருகிறது; இவை தொடர் ந்து வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறி இருந் தார்.தற்போது, 'விருப்பமுள்ளவர்கள், ரேஷன் பொருட்கள் வாங்குவதை கைவிடுங்கள்' என, அரசு சார்பில், கோரிக்கை வைக்கப் படுகிறது.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஆக-201722:27:50 IST Report Abuse

D.Ambujavalliநீங்க வாங்கும் 'கட்டிங்' 'கமிஷனை' விட்டுக்கொடுங்க முதலில் எங்கே, பங்கு வைக்கப் போதவில்லையென்று. 45 ஐ 60 ஆக்கலாமா என்று பார்க்கிறீர்கள் உங்களைத் திருத்திக்கொண்டு உபதேசம் பண்ண வாங்க

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஆக-201721:43:06 IST Report Abuse

D.Ambujavalliநாங்கள் காஸ் மானியம் வீட்டுக் கொடுக்கணும், ரேஷனை விட்டுக்கொடுக்கணும் ,முடிந்தால் ஊரையே உங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு காடு மலையென்று ஓடிவிடணும் நீங்க மட்டும் சம்பளம் ரெண்டு பங்கு, சலுகைகள் நாலு பங்குன்னு வாரி வழிக்கணும் நீங்கஎதை. விட்டுக்கொடுத்தீங்க இதுவரை மானம் மரியாதை எல்லாம் விட்டுக்கொடுத்து உங்கள் பதவி, ஊழல் பணத்தைக் காப்பாற்ற டில்லி போகிறீர்கள் அவ்வளவுதான்

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
13-ஆக-201721:23:18 IST Report Abuse

IndhuindianWhy go around the bush Link ration card with Aadhar - Pan and automatically eliminate those with income of say 5 lacs under PDS

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)