தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 12, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்


தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மன் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக்
கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் உட்பட, அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தையும் மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்ட மற்றும் கலைத்திட்ட குழுக்கள் அமைத்து, பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணி துவங்கிஉள்ளது.இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில்,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன.மாநிலம் முழுவதும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துகேட்பு கூட்டம், ஆலோசனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை பெற, பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்ட மாற்றத்திற்காக, புதிய இணையதளமும் விரைவில்துவங்கப்பட உள்ளது.
இந்நிலையில், புதிய பாடத்திட்டம் குறித்து, சர்வதேச, தேசிய அளவிலான பல்வேறு பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள முக்கிய அம்சங்கள் தொகுக்கப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.இதில், அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளின், தொழில்நுட்ப கல்வியை இடம்பெற வைக்கலாம் என, கல்விக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.கணினி அறிவியல், தகவல் தொடர்பு, அடிப்படை மின்னணு தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் போன்றஅம்சங்கள், வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களில் இடம்
பெற்றுள்ளன.இந்த பாடங்கள், தமிழக பாடத்திட்டத்திலும் இடம் பெற உள்ளன. இதன் மூலம், தமிழக புதிய பாடத்திட்டத்தில் படிக்கும்மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் முன், இன்ஜி., அடிப்படை பாடத்தை தெரிந்து
கொள்ள வாய்ப்புள்ளது. - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vairamani Natarajan - Chennai,இந்தியா
21-ஆக-201710:19:25 IST Report Abuse
Vairamani Natarajan ஒரு மாணவன் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு வெளியேறும்போது தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கான அனுபவமும் பெற்றிருக்கவேண்டும். அந்த அளவில் பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும். இங்கே ஆய்வகங்களே சரி கிடையாது. அப்படி இருக்கும்போது மாணவர்கள் எங்கு சென்று பயிற்சி மேற்கொள்வது? ஆறாம் வகுப்பில் இருந்தே ஆய்வுக்கூடத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அவசியம். இங்கு பத்துக்கு மேல்தான் பயிற்சியே உள்ளது. அதையும் ஒருவர் எழுதி மற்றொருவர் காப்பியடிப்பது. பின் எப்படி இருக்கும் மாணவர் நிலை
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201720:53:19 IST Report Abuse
மலரின் மகள் பள்ளி கல்வி இயக்குநகரத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து மற்றும் பல்வேறு பள்ளி ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டில்லாமல், வெறும் அண்ணா பல்கலை கழகத்தினர் மட்டுமே உயர் மட்டத்தில் அமர்ந்து கொண்டு பாடத்திட்டம் தயார் செய்வது சரியல்ல. முன்னாள் துணை வேந்தரும், ஒருங்கிணைப்பாளர்களும் முழுமையான கல்வியாளர்கள் அல்ல. முன்னவர் பொறியியல் பாடம் புகட்டுவதிலிருந்து மாமாங்கத்திற்கு முன்பே வெளியேறி வெறும் நிர்வாகத்தை தான் கவனித்தார், அடுத்தவரோ கிரிஸ்டல் குரோவ்த் என்ற ஒரு மையத்தை இயக்குநகராக இருந்தவர். அவர் ஆராய்ச்சியாளர். மைசூரில் உள்ள கல்வி கலகத்தினரையோ, NCERT, NITTTRI போன்ற நிறுவனங்களின் சிறப்பானவர்களையோ இதில் இணைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவ பேராசிரியர்கள் குறிப்பாக முதலாண்டு பாடம் எடுப்போர் மற்றும் வேளாண், கால்நடை போன்ற இன்னபிற பல்கலை ஆசிரியர்களை பனிரெண்டிற்கு பிறகு மாணவர்கள் எந்த பாடம் சேர்வார்களோ அந்த பாட பேராசிரியர்களை குழுவில் சேர்க்க வேண்டும். குறைந்தத்த்து 25 பிரிவுகளில் பாடத்திட்டத்தை உருவாக்க குழுக்கள் வேண்டும். மேற்சொன்ன இருவரும் சரியான சாய்ஸ் அல்ல. ஒருவர் இயற்பியல் பாடத்திட்டத்திலிருந்து பிறந்து சென்றவர். அவர் நானோ தொழில் நுட்பத்தை கொண்டுவருவார் என்று இப்போதே சொல்லலாம். உயிரியல் பாடங்களை இருவருமே வாழ்நாளில் படித்ததே இல்லை. இருவருக்குமே வரலாறு, புவியியல், வணிகம், கணக்கு பதிவில், போன்ற பல்வேறு துறைகளில் வீசை என்ன விலை என்று கேட்டும் அளவிற்கே பரிச்சயம் இருக்கும். கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பை ஆய்வு செய்ய குழுவில் தலைவர்களில் ஒருவராக சென்றவர் அந்த அறிவாளி. அனைவருக்கும் தெரியும் குறிப்பாக அவருக்கும் என்போன்றோருக்கும் தெரியும் அவர் அதற்கு தகுதியே பெறாதவர் என்று. இருந்தாலும் எத்ரிகாலத்தில் தொடர்ச்சியாக பதவி கிடைக்கும் என்பதற்காகவே அவர் அதில் ஒட்டி கொண்டவர். இது ஒரு தவறு என்று அன்றே எழுதி இருந்தோம். படித்தவர்கள் பண்பாளர்களாக இருக்கவேண்டும். தன சார்ந்த துறை இல்லை என்றால் அத்துறை வல்லுனரை பரிந்துரை செய்து ஒதுங்கி விடவேண்டும். அது அண்ணா பல்கலையில் இல்லை. தான்நாள் அனாதித்தையும் தங்களது ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு உருவாக்கவும் சமாளிக்கவும் முடியும் என்று எண்ணம் கொண்டோராக இருப்பர் போல தெரிகிறது. உங்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், மத்திய அரசின் கல்வி கொள்கை மற்றும் தொழில்நுட்ப கொள்கை அடிப்படையிலே தான் பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். நான்காண்டுகளுக்கு பழைய கல்லை புதிய மொந்தையில் அடைக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்ட அண்ணா பல்கலையால் அதை திறம்பட செய்ய முடியாது எனபதஹி பல்வேறு நிகழ்வுகளால் உணர முடிகிறது. தமிழகத்தின் உயர்கல்வி பாடத்திட்டங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. அண்ணா பல்கலையில் பயின்ற எத்துணை பேர் சிவில் சர்வீஸ் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள். கேட் எக்ஸாமிலும் தலைகுனிவு தானே வருகிறது. அவர்களுக்கு உட்பட்ட பாடத்திட்டம் சரியாக இல்லாத பொது பள்ளி படிப்பில் எவ்வாறு செயல் பட முடியும். எனது மழலைக்கு என்னால் திறம்பட படம் சொல்லித்தர முடியாது என்பதை நான் உணர்கிறேன். அதற்கு பள்ளி உள்ளது அந்த ஆசிரியர்கள் தான் அதை கவனிக்கவேண்டும். மருத்துவம் படித்தவர்கள் அனைத்து மருத்துவமும் செய்வதற்கு விதிகள் அனுமதித்தாலும் குழந்தைகளுக்கு மருத்துவத்தை சிறப்பு மருத்துவர் தான் பார்க்கிறார் என்பதை அவர்கள் உணர வேண்டும். நரம்பியலில் மீயுயர் பட்டம் பெற்றவர் பல் பிடுங்க கூடாது அல்லது அதற்கான வைத்தியமும் பார்க்க கூடாது. எல்லை மீறி துறை சாராதவர்களா அவசர அவசரமாக செய்கிறார்கள். அரசாக நியமனம் செய்வதில் பல்வேறு ஓட்டைகள். பள்ளி கல்வி பாடத்திட்டம் மாற்றுவதற்கு தலைவர்கள், குழு உறுப்பினர்களை பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு வைத்து அவர்களின் முன் அனுபவத்தை வைத்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளி காவ்லி என்பது நாட்டின் எதிர்காலம். அடிப்படை கல்விகள் பெரியளவில் மாற்றம் காணாது. ஆதிசோடிகளையும், உயிர்மெய் இடுதுகளையும் சொல்லித்தரும் முறையை வேண்டுமானால் மேம்படுத்தலாம் தவிர அதை பாடத்திட்டத்திலிருந்து எடுத்து விட்டு வேறொன்றை சேர்ப்பது சரியாக இருக்காது. பெயர் சொல்லப் பட்ட இருவரும் ஒதுங்குவதே சிறப்பு. அல்லது அவர்கள் தாங்கள் தான் அந்த பதவிக்கு மிகச் சரியானவர்கள் என்று விளக்கட்டும். இருவரின் C. V. யும் பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கானதாக இருக்கிறதா? இல்லவே இல்லையே. எங்கே அவர்கள் தங்களின் வேதியியல் அறிவையும் குறிப்பாக ஆய்வக அறிவு மற்றும் உயிரியல் அறிவையும் விளக்கட்டும். தாவரவியலில் பூச்சூத்திரம் படித்தவர்களா அல்லது டேக்ஸானாமி அறிந்தவர்களா. இல்லவே இல்லை. குருடர்கள் யானையை வருணிக்கப் போகிறார்கள் தொட்டு பார்த்து. தினமலர் என்போன்ற எதிர்ப்பு கருத்துக்களை நிச்சயம் வெளியிடவேண்டும். அவர்கள் படிக்கட்டும் அப்போது தான் எது சிறந்ததொ அது நமக்கு கிடைக்கும். ஒரு முக்கியமான ஒன்றை கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது பாடப்புத்தகம். அதை இவர்கள் யாரும் பதினொன்று பனிரெண்டு மாணவர்களுக்கு எழுதவில்லை. அதுவும் தமிழிலும் தேவை படுகிறது. அடுத்ததாக இவர்கள் கலோரி ஆசிரியர்களை நிறைய பயிற்சி வகுப்புகளை நாணய தொழில்நுட்பம் பயோ கிறிஸ்டல்ஸ் போன்றவற்றில் எடுத்திருக்கிறார்கள் அனால் இவர்கள் யாரும் பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சியை தந்திருக்கவில்லை. இதையெல்லாம் பார்க்க வேண்டும். நமது ஆசிரியர் குறிப்பாக அரசு ஆசிரியர்களின் திறனை அறிந்து அவர்களுக்கு அளிக்கப்ப்பட்ட பயிற்சிகள் அதில் அவர்களின் திறன் எவ்வாறு என்று அரிது தான் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். நிறைய பள்ளிகளில் ஆய்வகங்கள் இல்லை. அதற்கு வேண்டிய உபகரணங்கள், வேதி பொருட்கள் இல்லவே இல்லை. ஆசிரியர்களுக்கு செய்முறை பயிற்சி செய்வதற்கு தெரியவில்லை, அப்படியே செய்தாலும் சரியான விடை அவர்களுக்கே வருவதில்லை. இவை நிதர்சனம். கசடற காப்பதே இல்லை. கசடற பாடம் புகட்டினால் தானே. என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அண்ணா பல்கலையினரை வழக்கம் போல சிலரை சிபாரிசு செய்ய சொல்லி இருப்பார்கள் தெரிந்தவர்களை சிபாரிசு செய்திருப்பார்கள். பழைய கதை அப்படியே தொடர்கிறது. இது எல்லாம் ஐ நாவின் இந்திய கலாச்சாரத் தூதுவராக ஐஸ்வர்யா - ரஜினி மகளை தேர்ந்தெடுத்தது போலத்தான். மிக கடினப் பட்டு இதை எழுதி இருக்கிறேன். குழுவில் இருக்கும் யாருக்கும் என்னை தெரியாது, நான் அவர்களை பற்றி நெட்டில் படித்து அவர்கள் தகுதிக்குரியவரலா என்று படித்து எழுதுகிறேன். எனக்கு சந்தேகம் வர காரணம் ஜேர்மன் மற்றும் அமெரிக்க கல்வி முறை என்ற வார்த்தை தான். இரண்டு கேள்விகளும் நமக்கு ஒவ்வாது. ஜேர்மன் கல்வி முறையை பொறியியலும் தான் பார்ப்பார்கள். கிண்டி பொறியியல் கலோரியில் கொஞ்சமாகவும் ஐ ஐ டியில் கொஞ்சம் அதிகமாகவும் ஜேர்மன் மொழியி பயிற்று விற்பார்கள் பாட நேரம் முடிந்த பிறகு. அதிலிருந்து தான் அப்போதே சந்தேகம் பொறியியல் படித்தவர்கள் மட்டும் இதில் இருப்பார்கள் என்று. அண்ணா பல்கலை என்பதே பல்கலை என்ற அளவிற்கு தகுதி பெறாத தக்கதல்ல. எங்கே பல கலைகலை அவர்கள் சொல்லி தருகிறார்கள். அனைத்தடியும் ஒரு பொறியியல் கல்வி இயக்குனரகம் போன்றல்லவா இருக்கிறது. சென்னை பல்கலை, மதுரை காமராசர் பல்கலையை அதிலிருந்து தொழிற் கல்விகளை தனித்தனியாக நிர்வாக வசதிக்காக தமிழ் நாட்டில் மட்டுமே புதிதாக பிரித்தார்கள் நோக்கம் எனபது மறைந்த முதல்வர்கள் பெயரில் பல்கலைகள் வேண்டும் என்பதற்காக கூட இருக்கலாம். தமிழகம் தவிர வேறெங்காவது இந்த நிலை உண்டா? எல்லா மாநிலங்களிலும் பல்கலைகள் மருத்துவம் பொறியியல் கலை சட்டம் என்று அனைத்து பாடங்களையும் போதிக்கின்றன. அங்கையால் இன்டெர் டிசிபிலனாரி பாடத்திட்டங்கள் சிறப்பாக செயல் படும். தமிழா பல்கலை அவ்வாறில்லை. கல்வியாளர்கள் யோசிக்கட்டும். குறைந்த பட்சம் அண்ணா பல்கலையின் இஅயற்பியல் துறை, வேதியியல் துறை, கணித துறை பேராசிரியர்களை தலைமை பதவியில் அமர்த்தி இருக்கலாம். கொஞ்சம் லாஜிக் ஆவது இருந்திருக்கும். கல்வி மேம்பட வேண்டும். பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
bairava - madurai,இந்தியா
13-ஆக-201716:24:16 IST Report Abuse
bairava அடேய் அந்நிய கைக்கூலிகள் போல செயல்படாதீங்க அமெரிக்காவில் பணிபுரியும் பல நிபுணர்கள் நமது பழைய கல்விமுறையில் பயின்ற பொறியாளர்கள் தான் எதுக்குடா அவனோட கல்விமுறையை இங்கே திணிக்கப்போறீங்க அமெரிக்கா ஏகாதிபத்தியம் தேவையில்லை என்று சொல்லும்போது அவனோட கல்விமுறையை இங்கே திணித்து அதன் மூலம் அவன் வரி வாங்க போறான் அதுக்கு நீங்க அடிமையடா
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201712:15:46 IST Report Abuse
மலரின் மகள் ஆய்வகங்களை மேம்படுத்தினால் போதுமானது. அதிக செலவு பிடிக்கும் செயல் அது. ஆகையால் ஆய்வகங்களை ஒவ்வொரு மாவட்ட மையத்திலும் ஒன்றாக வைத்து அதை பள்ளி மாணவர்களுக்கு அரசே நடத்த வேண்டும். மாணவர்களுக்கு அங்கு ஒவ்வொரு மாதமும் மாதத்தில் ஒரு வாரம் பயிற்சி தர வேண்டும். கம்ப்யூட்டரில் பிரிண்டர் ஐ ஷேர் செய்து கொள்வது போலத்தான். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 'STRENGTH OF MATERIALS' ஆய்வகங்களை எந்த கல்லூரியில் சிறப்பாக நடத்துகிறார்கள். அதற்கு பல கோடி ஆகும் என்பதால் அந்த ஆய்வகங்களை ஏற்பாடு செய்வதே இல்லை. ஏமாற்றி விடுவார்கள். அதை திறமையாக சொல்லி தரும் ஆசிரியர்கள் விரல் விட்டு எண்ணி விடலாம். இது போலவே பலதுறைகளும் ஒட்டு மொத்த திறமை குறைவாக இருப்பதை அறியலாம்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201712:07:54 IST Report Abuse
மலரின் மகள் சராசரியாக பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவர, விலங்கியல் ஆய்வகங்களுக்கு ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இந்திய ரூபாயில் குறைந்தது ஏழு கோடி ரூபாய் தேவை படும். வெறும் இருபது மாணவர்களுக்கு ஆய்வகங்கள் நடத்த மட்டும். கூடுதலான ஒவ்வொரு மாணவனுக்கும் குறைந்தது ஐந்து லட்சம் ரூபாயை செலவளிக்க வேண்டும். அதிகப் படியாக பத்து மாணவர்களை சேர்த்து கொள்ள இந்த வசதி. அதற்கு மேல் சேர்க்க வேண்டும் என்றால் புதிய ஆய்வகங்களை தனியாக அதே அளவு செலவு செய்ய வேண்டும். இந்த செலவு கட்டிடம் நீங்கலாக. நியூட்டன் வளையத்தை வேதியியல் ஆவ்வகத்தில் மாணவர்கள் தெளிவாக சிறப்பாக செய்து காட்ட குறைந்தது வேதி பொருட்களுக்காக மட்டும் ஐந்தாயிரம் ருபாய் செலவு செய்ய வேண்டும். அப்போது தான் மிகத் தெளிவாக சிறப்பாக வரும். ஜேர்மன் பொருட்கள் குறிப்பாக வேதி பொருட்கள் படிப்பதற்கான தரத்தில் இருப்பவை மிகவும் அதிகம். நம்மூரில் டபுள் டிஸ்ட்டில்ட் வாட்டர் என்று குலை தண்ணீரை லிட்டர் ஐந்து ரூபாய்க்கு ஸ்பெலிர் மூலம் பெறுகிறார்கள். அதன் மூலம் எந்த வினையும் சரிவர நடக்காது. மேற்படி தண்ணீருக்கு லிட்டருக்கு இருநூறு ரூபாய் மிகக் குறைந்த அளவில் ஆகும். மருத்துவத்தில் தூய்மையான தண்ணீரை ஐந்து மில்லி பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201711:59:39 IST Report Abuse
மலரின் மகள் ஏழுவயதில் தான் ஒண்ணாம் வகுப்பா?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201711:59:15 IST Report Abuse
மலரின் மகள் அப்படி என்றால் எல் கே ஜி, யு கே ஜி, பிலே ஸ்கூல் எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டுமே? அங்கெல்லாம் இது இல்லை. ஏழு வயதுக்கு முன்பு பள்ளியில் சேர்க்க அனுமதி இல்லை. ஆனால் பெற்றோர்கள் அதற்கு நம் நாட்டில் உடன் பட மாட்டார்கள். தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக தங்களுக்கு தொந்திரவு இல்லாமல் ஓரிடத்தில் சில மணி நேரங்கள் வைத்திருக்கவே பலர் விரும்பு கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201711:56:59 IST Report Abuse
மலரின் மகள் பிரேசில் கல்வி முறை தானே சிறந்தது என்று சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201711:56:34 IST Report Abuse
மலரின் மகள் நமது ஆசிரியர்கள் திறம்பட கல்வியை புகட்ட வல்லவர்கள் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவர்களை திறன் மேம்பாடு செய்வது ஊழல் இல்லா தேசம் உருவாக்குவது போல கடினமான வேலை என்றும் அதற்கு ஆத்மார்த்தமான பங்களிப்பு வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
அசோக் வளன் - Chuan Chou,சீனா
13-ஆக-201711:41:01 IST Report Abuse
அசோக் வளன் எந்த ஒரு பாட திட்டமாக இருந்தாலும் அது நம் அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்க வேண்டும் ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல எல்லோரும் ரோபோடிக்ஸ் மற்றும் என்ஜினீரிங்கும் படித்தால் அதற்கான வேலைவாய்ப்புக்கு போட்டி கூடுமே தவிர வேறொன்றுக்கும் உதவாது. உதாரணத்துக்கு நம்மூரில் முடி வெட்டுபவனை ஏளனமாக பார்க்கிறோம் ... ஆனால் சொந்தமாக வானஊர்தி வைத்துள்ள ஒரு முடி திருத்துபவரை பற்றி தெரியுமா ... எந்த தொழிலை செய்தாலும் அதில் முன்னேறலாம் ... இன்னொரு உதாரணத்துக்கு வாடகை டாக்ஸி ஓட்டுபவர்கள் ,கூடையில் வடை விற்பவர்கள் , போன்றவர்களை ஒருங்கிணைத்து பல கோடிகளை அள்ளியவர்களை (ஓலா டாக்ஸி ) நாம் பார்க்கிறோம் ... ஆடி காரில் செல்லும் டி கடை முதலாளியை பார்க்கும் அதே சமயத்தில் சிங்கள் டீக்கு சிங்கி அடிக்கும் பல என்ஜினீர்களை பார்க்கிறோம் .... ஐந்தாம் வகுப்பு தாண்டாத பலர் சுய தொழில் செய்து கோடிகளை அள்ளும் அதே சமயம் மெத்த படித்து பத்தாயிரம் சம்பளத்துக்கும் கூலி வேலை செய்பவர்கள் பலர். இதனால் தான் பலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு தங்கள் வீட்டிலேயே வாழ்க்கைக்கு தேவையானதை சொல்லி கொடுத்து வருகிறார்கள் .. கடைசியாக ஒன்று.... பாஸானா microsoftla வேலை பால் ஆனா பில்கேட்ஸ் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை