காங்., கூட்டணியில் நிதிஷை தொடர்ந்து சரத் பவாரும் ஓட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
காங்.,,கூட்டணி, நிதிஷ்,சரத்பவார்,ராகுல், சோனியா, பா.ஜ., ஓட்டம்

புதுடில்லி:காங்., தலைவர் சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தை, தேசியவாத காங்., புறக்கணித்தது; இதனால், காங்., கூட்டணியில் இருந்து, நிதிஷை தொடர்ந்து, சரத் பவாரும் வெளியேற முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. நட்பு கட்சிகள் ஒவ்வொன் றாக வெளியேறி வருவதால், காங்., தலைவர் சோனியா, கடும் விரக்தி அடைந்துள்ள நிலை யில், மற்றவர்களை தக்க வைத்துக் கொள்ள, துணைத் தலைவர் ராகுல் முயன்று வருகிறார்.

காங்.,,கூட்டணி, நிதிஷ்,சரத்பவார்,ராகுல், சோனியா, பா.ஜ., ஓட்டம்

பார்லி., தேர்தல், 2019ல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன், பா.ஜ.,வுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில், காங்., ஈடுபட்டுள்ளது.
காங்கிரசின் முயற்சியால், எதிர் கருத்துக்கள் உடைய, திரிணமுல் காங்., மற்றும் மார்க். கம்யூ., போன்ற கட்சிகள், ஓரணியில் வந்தன.

ஜனாதிபதி தேர்தல்


ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்த லில், காங்., தலைவர் சோனியா தலைமை யில், ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, பொது வேட்பாளரை நிறுத்தின; எனி னும், அத்தேர்தலில், பா.ஜ., வென்றது. ஜனாதி பதி தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் கூட்டணி யில் இருந்து, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான, நிதிஷ் குமார், பா.ஜ., சார்பில், ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிட்ட, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளித்தார். இதை தொடர்ந்து, அந்த கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும், பா.ஜ.,வுடன் கைகோர்த்தார்.
இந்நிலையில், காங்., தலைமையிலான,

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வேட்டு வைக்கும் சம்பவம், மீண்டும் நடந்துள்ளது. எதிர்க்கட்சி களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகை யில், டில்லியில், நேற்று முன்தினம், சோனியா தலைமையில் கூட்டம் நடந்தது. காங்கிரசுடன், மார்க்.கம்யூ.,- இ.கம்யூ., - தி.மு.க., - திரிணமுல் காங்., - பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி உள்ளிட்ட, 16 கட்சிகள் பங்கேற்றன.பார்லி., குளிர்கால கூட்டத்தொடருக்கு முன், அனைத்து எதிர்க் கட்சிகளும் இணைந்து, நாடு முழுவதும், மக்கள் இயக்கம் நடத்த, கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.

புறக்கணிப்பு


இதற்காக, அனைத்து கட்சிகள் அடங்கிய ஒருங் கிணைப்பு குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. எனினும், மஹாராஷ்டிரா வைச் சேர்ந்த, தேசியவாத காங்., இந்த கூட் டத்தை புறக்கணித்தது. அக்கட்சி தலைவர், சரத் பவார், சமீபகாலமாக, பா.ஜ., தலைவர் களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். எனவே, தேசியவாத காங்கிரசும், பா.ஜ., பக்கம் சாய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தோழமை கட்சிகள், அடுத்தடுத்து, பா.ஜ., பக் கம் சாய்வது, காங்., தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து, மீத முள்ள தோழமை கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ., பக்கம் சாயாமல் தடுக்கும் நோக்கில், அவர்களை கண்காணிக்கும் வேலையை, துணைத் தலைவர் ராகுல் மேற்கொண்டு உள்ளார்.
தமிழகத்தில், அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்த போது, சட்டசபையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, பெரும் பான்மையை நிரூபிக்க, கூவத்துார் விடுதியில், எம்.எல்.ஏ.,க் கள் அடைத்து வைக்கப்பட்டிருந் தனர். அது போன்று, கூட்டணி கட்சி தலைவர் கள், ஆளும், பா.ஜ., பக்கம் சாய்ந்து விடாமல் தடுக்கும் நோக்கில், அவர்களை அரவணைத்து, வேண்டிய தேவைகளை நிறைவேற்ற

Advertisement

வேண்டிய சூழலில்,காங்.,துணை தலைவர் ராகுல் உள்ளதாக,அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஜ.த.,வுக்கு அமித் ஷா அழைப்பு


பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலை வரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது, ஊழல் வழக்கு பதிவானதை அடுத்து, அக்கட்சியுடன் கூட்டணியை, முதல்வர் நிதிஷ் குமார் முறித் தார்.பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி அமைத் தார்; பீஹார் அமைச்சர வையில், தற்போது, பா.ஜ.,வும் இடம் பெற்றுள்ளது. நிதிஷ் குமார், சமீபத்தில், டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.இந்நிலையில், சமூக வலைதளமான, 'டுவிட் டரில்' அமித் ஷா கூறியதாவது:நிதிஷ் குமாரை சந்தித்து பேசி யது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இணையும்படி, அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சரத் யாதவ் நீக்கம்


பீஹாரில், லாலு கட்சியுடனான உறவை முறித்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த, நிதிஷ் குமாரின் முடிவுக்கு, ஐக்கிய ஜனதா தளத்திற்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர், சரத் யாதவ், அக்கட்சி, எம்.பி., அலி அன்வர் ஆகியோர் அதிருப்தியில் உள்ள னர். இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா குழு தலைவர் பதவியில் இருந்து, சரத் யாதவை நீக்கக்கோரி, அக்கட்சி, எம்.பி.,க்கள், நேற்று, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.
அந்த பதவிக்கு, புதிய தலைவராக, ஆர்.சி.பி. சிங்கை நியமிக்கும்படி, மனுவில் கூறியுள் ளனர். எனினும், கட்சி, எம்.பி.,யாக, சரத் யாதவ் தொடர்வார் என, ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-ஆக-201722:22:17 IST Report Abuse

Nagarajan Dகுடும்பம் இத்தாலிக்கு ஓட வேண்டியது தான் பாக்கி. நேரு குடும்பம் அழிந்தால் தான் இந்தியா முன்னேற முடியும். காந்தி குடும்பம் வாழ்க பாரதம். வந்த மாதரம்

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
13-ஆக-201720:46:29 IST Report Abuse

Solvathellam Unmaiசூடா ஒரு ஐநூறு கட்டு பார்சல்...

Rate this:
Appu - Madurai,இந்தியா
13-ஆக-201716:28:56 IST Report Abuse

Appuபிளாக் மெயில் மற்றும் அசிங்கமான அரசியல் சாக்கடை ஓட ஆரம்பித்துவிட்டதன் அறிகுறி..முதல் டாகட் ஐ டி ரைடு மிரட்டல், ஒத்துவந்தால் ரைடு மற்றும் குற்றங்களில் இருந்து நடப்பு ஆட்சியில் விலக்கு,,,ஆனால் காங்கிரசை விட்டு விலகி மெதுவாக பாஜக பக்கம் சாய்ந்துவிடவேண்டும்..நல்ல டீலிங்...

Rate this:
மேலும் 95 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)