ஒன்றுக்கு பத்து தோட்டாக்கள் அனுப்புவோம்: பாக்.,கிற்கு எச்சரிக்கை| Dinamalar

ஒன்றுக்கு பத்து தோட்டாக்கள் அனுப்புவோம்: பாக்.,கிற்கு எச்சரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ஒன்றுக்கு, பத்து தோட்டாக்கள், அனுப்புவோம், பாக்.,கிற்கு, எச்சரிக்கை

ஸ்ரீநகர்:பாகிஸ்தானின் ஒவ்வொரு தோட்டாவுக்கும் 10 தோட்டாக்களை இந்திய ராணுவம்அனுப்பும் என ஜம்முகாஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங் தெரிவித்துள்ளார்.ஜம்முகாஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியாவை சேர்ந்த 40 வயதான பெண்மணி உயிரிழந்தார்.
இது குறித்து ஜம்முகாஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் கூறியதாவது:
பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு அவர்கள் கடும் விளைவை சந்திப்பார்கள். பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு தோட்டாவுக்கு பதிலாக இந்திய ராணுவம் 10 தோட்டாக்களை திருப்பி அனுப்பும்.பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201711:40:33 IST Report Abuse
எப்போதும் வென்றான் பாகிஸ்தானையும் சீனாவையும் அடக்க வேண்டும் என்பது சரி... ஆனால் " மோடி தலைமையில் இந்தியா மிக விரைவாக முன்னேறிக்கொண்டு இருக்கிறாரோ."... என்று சொல்லி சிரிப்பு மூட்டி விட்டீர்களே....
Rate this:
Share this comment
Cancel
cvm -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201709:56:05 IST Report Abuse
cvm மலரின் மகள் கருத்து மிகவும் சரி. பெல்லட் குண்டுகள் உபயோகிக்க கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதித்தால் ராணுவம் எப்படி செயல்படும். மேலும், மனித உரிமை இயக்கங்கள் வேறு. இது போன்ற இயக்கங்களை பற்றி கவலை படாமல் ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து பாருங்கள். மத்தியில் உள்ள பிஜேபி அரசு இதை உடனே செய்யவேண்டும். சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை குறிவைத்து செயல்படும் அரசியல் கட்சி இதுவரை இந்தியாவை நாசமாகியது போதும். நமது பிரதமர் துணிவான சில முடிவுகளை எடுத்து இந்திய நாட்டின் இறையாண்மையை காக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஆக-201709:30:46 IST Report Abuse
balakrishnan வேற எதாவது பேசுங்க, உங்க பேச்சு சிரிப்பா இருக்குது, எல்லோரும் அட்டகத்தி வீரர்கள்னு தெரிஞ்சி போச்சி, காத்தோடு சண்டை போடும் நவீன கத்தி சண்டை வீரர்கள்,
Rate this:
Share this comment
Cancel
Indira -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201709:22:23 IST Report Abuse
Indira நமது ராணுவம் திருப்பி அடிக்க தான் செய்கிறது. சொல்லி விட்டு அடிப்பதோ அடித்து விட்டு விளம்பரம் தேடுவதோ கிடையாது. மானம் கெட்ட பாகிஸ்தான் திருட்டுத்தனமாக உடலை அப்புறப் படுத்தும். பிஓ கே யில் புகுந்து அடித்ததையே இல்லை என்றவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
13-ஆக-201708:18:02 IST Report Abuse
Sitaramen Varadarajan இனி நாம் எவ்வளவு தாக்கினாலும், பாரதத்தை உலக நாடுகள் பாராட்டும். பாகிஸ்தானின் வன்முறை உலகம் முழுவதும் தெளிவாக உணரப்பட்டு இருக்கிறது. தைரியமாக சரித்திரம் படைப்போம். பாகிஸ்தானுக்கு வால்பிடிக்கும் அமைதி மார்க்க விரும்பிகள் தாராளமாக அவர்களின் தாய் மண்ணிற்கு செல்லலாம். போதுமடா இந்த மத சார்பற்ற சாவகாசம்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:16:01 IST Report Abuse
Srinivasan Kannaiya சூடு பட்ட பூனை... திரும்ப வராது... பூனை சரியாக சூடுபடவில்லை போல உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201707:58:36 IST Report Abuse
Giridharan S ஒரு தோட்டாவுக்கு பத்து தோட்டா அணுப்புவீங்களா. மத்திய அரசு ஒத்துக்கிட்டாங்களா அப்புறம் அந்த பத்து தோட்டாக்களும் வெறும் இடத்தில அனுப்பி வேஸ்ட் பண்ணிட போறீங்க
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201707:56:58 IST Report Abuse
Giridharan S பேசி பிரயோஜனம் இல்லை. உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்க சார். போர் வந்தால் துப்பாக்கி தூக்கிண்டு நீங்க போகப்போறது இல்லை. உயிர் எவ்வளவு உயர்ந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஆக-201707:17:57 IST Report Abuse
Kasimani Baskaran ஒன்றுக்கு நூறு என்ற அளவில் தோட்டாக்கள் மட்டுமல்ல - எல்லைச்சாவடிகளையும் அடித்து நொறுக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
13-ஆக-201705:56:55 IST Report Abuse
Raj இவங்கள கொண்டு மொதல்ல எல்லைல நிறுத்தணும் அப்பறம் தெரியும் என்னா பேச்சு இது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.