அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சசி குடும்பம் நெருக்கடி தினகரன் பொதுக்கூட்டத்திற்கு வந்தே ஆக வேண்டும்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு
சசி குடும்பம் நெருக்கடி

மதுரை மாவட்டம், மேலூரில், நாளை, தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு வந்தே ஆக வேண்டும் என, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, சசிகலா குடும்பத்தினர், கடும் நெருக்கடி கொடுத்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்களுக்கு,சசி,குடும்பம்,நெருக்கடி

அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல். ஏ.,க்களில் பெரும்பாலானோர், சசிகலா குடும் பத்தினர் உதவியுடன், 'சீட்' பெற்று வெற்றி பெற்றவர்கள். ஜெ., மறைவுக்கு பின், பன்னீர் அணி, சசிகலா அணி என, அ.தி.மு.க., பிளவு பட்ட போது, 122 பேர், சசிகலா பின்னால் அணிவகுத்தனர்.மூன்றாக பிளவுசசிகலா கூறியபடி, முதல்வராக பழனிசாமியை தேர்வு செய்தனர்.

தற்போது,சசிகலா அணியில்,பழனிசாமி அணி,

தினகரன் அணி என,பிளவு ஏற்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கமின்றி, சுதந்திரமாக செயல் பட விரும்பும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல். ஏ.,க் கள், முதல்வர் பழனிசாமி அணியில் உள்ளனர்.

தினகரனுக்கு, 37 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித் தனர். அவர் புதிதாகநியமித்த நிர்வாகிகள் பட்டிய லில், 20எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றனர். அவர் களில், நான்கு பேர், 'தினகரன் கொடுத்த பதவி வேண்டாம்' என்றனர். பின், இருவர், 'பல்டி' அடித் தனர்.அதனால், 37 எம்.எல்.ஏ.,க்களும், தினகரனுக்கு ஆதரவாக உள்ளனரா என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது. பழனிசாமி அணியினர், தன்னை ஒதுக்கு வதை அறிந்த தினகரன், கட்சியை கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வர, சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பெரும் தவிப்பு


அவரது முதல் பொதுக்கூட்டம், நாளை, மதுரை மாவட்டம், மேலூரில் நடைபெற உள்ளது. இக்கூட் டத்திற்கு வரும்படி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல். ஏ.,க்களுக்கு, அழைப்பு விடுத்துள்ளார். தினகரனால், எம்.எல்.ஏ.,வாகி அமைச்சரான பலர், இரு தலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கின்றனர்.

தினகரன் கூட்டத்திற்கு சென்றால், முதல்வரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்; கூட்டத்திற்கு

Advertisement

செல்லாவிட்டால், தினகரன்கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாக, முடி வெடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதே போல், எம்.எல்.ஏ.,க்களும் தவித்து வரு கின்றனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் களை வரவழைத்து விட்டால், முதல்வரை மிரட்ட முடியும் என்பதால், தங்க ளால் பயன் அடைந்தவர்களை, கூட்டத்திற்கு வரும்படி, சசிகலா குடும்பத்தினர் கட்டாயப் படுத்தி வருகின்றனர்.

தினகரன் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள் எண்ணிக்கையை பொறுத்து, தமிழக அரசியலில், அடுத்தகட்ட திருப்பம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
13-ஆக-201719:16:43 IST Report Abuse

Balajiஇவர்களின் தலையீடு ஒடுக்கப்படாத வரை அதிமுகவிற்கு விமோசனம் பிறக்கப் போவதில்லை........ மாபியா குடும்பத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு எஞ்சியிருக்கும் காலத்தில் ஓரளவுக்கு மக்கள் நலன் சார்ந்து செயல்பட்டால் தான் அடுத்த தேர்தலில் இவர்களால் டெபாசிட்டே பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்......... மாபியாக்கள் அதிகாரத்துக்கு பயந்து அவர்களால் பின்னால் சென்றால் அதுவே இவர்களுடைய கடைசியாக வகிக்கும் பதவியாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்......... என்ன இவர்களை துரத்த மீண்டும் திமுகவையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது தான் சற்று நெருடலாக இருக்கிறது......... மக்கள் சற்று சிந்தித்து இவர்கள் இருவருமல்லாமல் வாக்களித்தால் தான் தமிழகம் வளர்ச்சி நோக்கி செல்லும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை..........

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஆக-201717:58:07 IST Report Abuse

Endrum Indianஅரசியல்வாதிகள் என்றால் பணம் ஒன்றே குறிக்கோள் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அவர்கள் நிலை. அப்படி இருக்கும் போது இது எல்லாம் சகஜமில்லே-வடிவேலு ஸ்டைலில்.

Rate this:
bairava - madurai,இந்தியா
13-ஆக-201716:28:53 IST Report Abuse

bairava இப்போ தெரியுதா மக்களுக்கு சேவை செய்ய உங்களை தேர்தெடுத்தால் நீங்கள் எவன் எவனுக்கோ கொடிபிடிக்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க வெட்கமாயில்லை

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)