இலவச வேட்டி - சேலை நூல், 'டெண்டர்' ரத்து| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலவச வேட்டி - சேலை நூல், 'டெண்டர்' ரத்து

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை:இலவச வேட்டி - சேலை தயாரிப்புக்கான, நுால் கொள்முதல், 'டெண்டர்' அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.விருதுநகர் மாவட்டம், சோழபுரத்தைச் சேர்ந்த, வெங்கட்ராம் ஸ்பின்னர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு:நுால் உற்பத்தி தொழிலில் உள்ளோம். நுாலில் சாயம் ஏற்றுவதற்காக, மும்பையில் உள்ள, சாயப் பட்டறை யூனிட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும், இலவச வேட்டி - சேலை தயாரிக்க, தேவைப்படும் நுால் கொள்முதல் செய்வதற்கான, டெண்டர் அறிவிப்பை, 2017 ஜூனில், அரசு வெளியிட்டது. டெண்டர் நிபந்தனையாக, 'கழிவுநீரை வெளியேற்றாத நிறுவனம்' என, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
சான்றிதழ்
தமிழகத்தில் மட்டும் தான், கழிவுநீரை வெளியேற்றாத யூனிட்டுகள் உள்ளன. இதர மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள், கழிவுநீரை வெளியேற்றாத நிறுவனம் என, சான்றிதழ் பெற முடியாது. மஹாராஷ்டிராவில், சாயப் பட்டறைகளின் கழிவுநீர், கடலுக்குள் வெளியேற்ற அனுமதிக்கப்படுகிறது. அதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒப்புதல் சான்றிதழும் அளிக்கிறது.எனவே, டெண்டர் நிபந்தனையை வலியுறுத்தாமல், இதர மாநிலங்களில் இருந்து பெறப்படும் ஒப்பந்தப் புள்ளிகளை, அரசு பரிசீலிக்க வேண்டும். அதுவரை, டெண்டர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே போல், முருகானந்தம் என்பவரும், மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி, எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு:நுால் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பு, 2017 ஜூன், 22ல் வெளியானது; ஒப்பந்த விலைப் புள்ளி சமர்ப்பிக்க, 2017 ஜூலை, 7 கடைசி தேதி. டெண்டர் அறிவிப்பு, பத்திரிகைகள் மற்றும், 'டெண்டர் புல்லட்டினில்' வெளியிடப்பட்டது. திறந்தவெளி டெண்டர் சட்டம் விதிகளின்படி, 50 கோடி ரூபாய்க்கு மேல் கொள்முதல் இருந்தால், அதற்கான டெண்டர் நோட்டீசை, வர்த்தக இதழில் வெளியிட வேண்டும். ஆனால், 2017 ஜூன், 22ம் தேதியான டெண்டர் அறிவிப்பு, இந்திய வர்த்தக இதழில் வெளியிடப்படவில்லை.சட்டப்படி, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படாததால், அந்த முகாந்திரத்தின் அடிப்படையிலேயே, இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படக் கூடியது.
அவகாசம்
மேலும், டெண்டர் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, அதை சமர்ப்பிக்க, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்; ஆனால், 15 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டுகளில் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக, அதை முன்னுதாரணமாக எடுத்து, தற்போதும், 30 நாட்கள் அவகாசத்தை குறைக்க முடியாது.அவகாசத்தை குறைப்பதற்கான காரணம், ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். விதிகளின்படி, 30 நாட்கள் அவகாசம் இருக்க வேண்டும் என்கிற போது, அதை பின்பற்ற வேண்டும்.
ஆனால், முந்தைய ஆண்டுகளில் குறைக்கப்பட்டு உள்ளது என்பதை தவிர, வேறு எந்த காரணங்களையும், கைத்தறித் துறை இயக்குனர் கூறவில்லை. எனவே, 2017 ஜூன், 22ம் தேதியிட்ட டெண்டர் அறிவிப்பு, ரத்து செய்யப்படுகிறது. அதனால், டெண்டர் நிபந்தனைகளின் தகுதியை ஆராய, எந்த காரணமும் இல்லை. சட்டப்படி, புதிய டெண்டரை அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை