கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை:கருத்தரங்கில் தகவல்| Dinamalar

தமிழ்நாடு

கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை:கருத்தரங்கில் தகவல்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை:கருத்தரங்கில் தகவல்

மதுரை:''உணவு பகுப்பாய்வாளரின் அறிக்கை மூலமே கலப்படம் செய்பவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க இயலும்,'' என, மதுரையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்ட தேசிய கருத்தரங்கில் நீதிபதி கருப்பையா குறிப்பிட்டார்.
இந்திய உணவு பகுப்பாய்வாளர் சங்கம் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு தேசிய தலைவர் குப்தா தலைமை வகித்தார். தேசிய பொதுச்செயலர் ஜோஷி முன்னிலை வகித்தார். பொருளாளர் சஞ்சீவ்குமார் வரவேற்றார்.
தொழிலாளர் நல மாவட்ட நீதிபதி கருப்பையா பேசியதாவது: கலப்பட உணவுகளை தடுப்பதில் பகுப்பாய்வாளரின் பங்கு முக்கியம். சமூக மற்றும் சட்ட ரீதியாக அவர்களின் பங்களிப்பு அவசியம். ஒரு உணவு பண்டத்தை உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது என உணவு பகுப்பாய்வாளர் அறிக்கை அளித்து விட்டால், சமூகத்தில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும். உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை உணவு பொருட்களுடன் கலப்படம் செய்வோர் மீது பகுப்பாய்வாளரின் அறிக்கை மூலம் நடவடிக்கை எடுக்க இயலும், என்றார்.
தேசிய துணைத்தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், ''ஒரு உணவிற்கு ஒரே மாதிரியான பகுப்பாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும் நோக்கத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உணவு கலப்பட சட்டத்தில் கலப்படத்திற்கு என வரையறை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அபராதம் மட்டுமே விதிக்க இயலும். எனவே கலப்பட அபாயம் தொடரும் நிலையுள்ளது. எனவே தற்போதைய சட்டத்திலும் கலப்பட வரையறையை கொண்டு வர வேண்டும்,'' என்றார்.புனே உணவு பகுப்பாய்வாளர் ேஹமந்த் குல்கர்னி, சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், பொன்னம்மாள், சுதாகரன், கருணாநிதி மற்றும் பலர் பங்கேற்றனர். இன்றும் கருத்தரங்கு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
13-ஆக-201707:04:09 IST Report Abuse
Amirthalingam Sinniah வனஸ்பதி என்று விளம்பரம் செய்தார்கள். பின்னர்தான். தெரிந்தது ... மக்களை ஏமாத்தினார்கள். இப்படிபடடவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை