'அமுதம்' அங்காடிகள் விரைவில் நவீனமயம்| Dinamalar

'அமுதம்' அங்காடிகள் விரைவில் நவீனமயம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
அமுதம், அங்காடி, விரைவில், நவீனமயம்

'அமுதம்' அங்காடிகளில், வாடிக்கையாளர்கள் வருகை குறைவதால், தனியாருக்கு இணையாக, அவற்றை நவீனமாக்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 'அமுதம்' என்ற பெயரில், சென்னையில், 19; கடலுாரில், மூன்று பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. வெளிச்சந்தையில், மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவே, அந்த அங்காடிகள் துவக்கப்பட்டன. ஆனால், அவற்றில் விற்கப்படும் பொருட்களின் விலை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து, விற்பனையும் பாதித்து வருகிறது.

இது குறித்து, வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறிய தாவது:தனியார் அங்காடிகளில், மளிகை பொருட்கள், மக்களை கவரும் வகையில் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன; 'ஏசி' வசதி செய்யப்பட்டு உள்ளன. பொருட்களின் விலை, தள்ளுபடி விலை, தயாரிப்பு தேதி என, அனைத்து விபரங்களும் தெளிவாக உள்ளன. அதிக ஊழியர்கள், வேலைக்கு இருப்பதால், மக்கள் கேட்கும் பொருட்கள், உடனே எடுத்து தரப்படுகின்றன.

ஆனால், அமுதம் கடைகளில், இட நெருக்கடிஇருப்பதுடன், குறைந்த ஊழியர்களே உள்ளனர். இதனால், பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதில்லை.பொருட்களும் தரமற்று இருப்பதால், மக்கள் வாங்குவதில்லை. இதையடுத்து, தனியாருக்கு இணையாக, அமுதம் அங்காடிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள், விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:38:12 IST Report Abuse
Srinivasan Kannaiya இருக்கும் இடத்தில் கடமை உணர்வோடு வேலை செய்தாலே விற்பனை அமோகமாக நடக்கும். தூங்கி வாழ்ந்தாலும்... நேரத்தை கடைபிடிக்கவில்லை என்றால் எப்பிடி வியாபாரம் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201705:34:40 IST Report Abuse
சேதுசேது பில் போடும் சமயம் தில்லு முல்லு செய்து கூட்டம்.. ஆ....ஊ...என்று எப்படியோ ஏமாற்றி அந்த வகையில் phd (ஏமாற்றுவதில்)செய்து சேவை செய்தா யார் அலருவாங்க அதிசயமான நேர்மையானவர் ஓரிரு வர் தவிர.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201705:34:40 IST Report Abuse
சேதுசேது பில் போடும் சமயம் தில்லு முல்லு செய்து கூட்டம்.. ஆ....ஊ...என்று எப்படியோ ஏமாற்றி அந்த வகையில் phd (ஏமாற்றுவதில்)செய்து சேவை செய்தா யார் லருவாங்க அதிசயமான நேர்மையானவர் ஓரிரு வர் தவிர.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.