அடையாள வேலை நிறுத்தம்; 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடையாள வேலை நிறுத்தம்; 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அடையாள, வேலை நிறுத்தம், ஜாக்டோ, ஜியோ, அறிவிப்பு

சென்னை, :கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 22ல், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு அறிவித்துள்ளது.

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 22ல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆக., 16 முதல், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை நடத்தவும், அடையாள வேலை நிறுத்தம் அன்று, அனைத்து தாலுகாக்களிலும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளது.

அதன் பின்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், செப்., 7 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட, முடிவு செய்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
13-ஆக-201721:39:14 IST Report Abuse
srisubram திரு . மோகன் சுந்தர்ராஜராவ் அவர்களே .. சரியான கிண்டல் . அடுத்தது சரியான கருத்து.
Rate this:
Share this comment
Cancel
HARISHBABU.K - Kallakurichi,இந்தியா
13-ஆக-201710:37:18 IST Report Abuse
HARISHBABU.K உங்களுக்கு சம்பளம் பத்தலையாடா கண்ணுங்களா, போங்க நீங்க போயி உண்ணாவிரதம் இருங்க, நாடு உருப்படும். உங்களுக்கு என்னடா, இந்த நாடும் நாட்டு மக்களும் குட்டி சுவ்ரா போகட்டும்,. நீ நல்லா இருந்த போடும். அப்படித்தானே, ஸ்ட்ரைக் பண்ணி நல்லா இருங்க போங்க
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
13-ஆக-201709:15:51 IST Report Abuse
srisubram இவர்களுக்கு , வேலை நிறுத்தம் செய்வது , மிரட்டுவது , கூச்சல் இடுவது தான் வேலை ..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:35:26 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜெ., யோ .எம் ஜி, ஆரோ , கலைஞரோ பலவிதமான அரசு நிறுவனங்களில் சம்பள பிரச்சினை இருக்கும் பொழுது எம் எல் ஏ களுக்கு மட்டும் ஊதியத்தை இரு மடங்கு ஆக்கி இருக்க மாட்டார்கwf. இது பழனிச்சாமியின் பக்குவமின்மையை காட்டுகிறது... ஏழாவது சம்பள கமிஷன், மினசார ஊழியர்களின் ஊதியம் , போக்குவரத்து கழக ஊழியகலின் ஊதியம் தீர்த்து வைக்காத பொழுது... இந்த மாதிரி நடந்து கொண்டது கண்டிக்க தக்கது.,..
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
13-ஆக-201708:32:08 IST Report Abuse
Mohan Sundarrajarao அரசு பணியில் இருக்கும்போதே அவர்கள் ஓய்வூதியம் தான் வாங்குகிறார்கள். பிறகென்ன ஓய்வூதியம் ? அதுவும் பழைய படி/
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
13-ஆக-201708:29:53 IST Report Abuse
Mohan Sundarrajarao பழைய ஓய்வூதிய திட்டம் காலாவதியாகி, உலகம் முழுவதும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு மாறி ஆயிற்று. இன்னும் உங்களுக்கு மட்டும் என்ன ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை