விவசாயிகளுக்கு மோகன் பாகவத் அழைப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மோகன் பாகவத் அழைப்பு

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 விவசாயிகளுக்கு,  மோகன், பாகவத், அழைப்பு

மொடக்குறிச்சி, ''நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை விவசாயிகள் அதிகப்படுத்த வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, சாவடிபாளையத்தில் கோசாலை உள்ளது. இதன், ௧4வது ஆண்டு துவக்க விழா, கோகுலாஷ்டமி உற்சவ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார்.
இங்கு பராமரிக்கப்படும், 700 மாடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து கோமாதா பூஜை செய்து வழிபட்டார்.நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:நம் முன்னோர்கள், மாடுகளை பராமரித்து, விவசாயத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாயம் மட்டுமின்றி மனித வாழ்வும் மேம்பட்டது.

நாட்டு மாடுகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அதை விவசாயிகள் அதிகப்படுத்த வேண்டும். இதனால், நாட்டு பொருளாதாரம் மேம்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா பகுதியில், எவ்வித அடிப்படை வசதியுமின்றி, மிகப்பெரிய கோசாலை உள்ளது. அதிலிருந்து மின்சாரம், இயற்கை உரம், தீவனம் அனைத்தும் பெறப்படுகிறது.பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. விவசாயிகள், பொருளா தாரத்தை உயர்த்த வேண்டும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-201719:14:22 IST Report Abuse
Malick Raja கொஞ்சநாளில் மருத்துவமனைகளில் கோமூத்திரம் மருந்தாக விநியோகிப்பார்கள் அதற்குத்தான் நாட்டுமாட்டை அதிகரிக்க நினைக்கிறார்களா?
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-ஆக-201710:25:21 IST Report Abuse
அறிவுடை நம்பி திருநெல்வேலிக்கே அல்வாவா ?? விவசாயத்தை பத்தி எங்களுக்கேவா ??? ரொட்டி சாப்பிடறவனெல்லாம் இங்கே வந்து விவசாயத்தை பற்றி பேசுகிறான்.. காலக்கொடுமை...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-ஆக-201710:23:07 IST Report Abuse
ஜெயந்தன் என்ன தைரியம் .... நம்ம விவசாயிகளை புழுவினும் கேவலமாக மதித்து விட்டு ..இங்கே வந்து உபதேசம் செய்கிறது இந்த பசுத்தோல் போர்த்திய புலி.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை