தற்கொலை முயற்சி உண்மையா? ஓவியாவுக்கு போலீஸ் 'சம்மன்!' | தற்கொலை முயற்சி உண்மையா? ஓவியாவுக்கு போலீஸ் 'சம்மன்!' | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை முயற்சி உண்மையா? ஓவியாவுக்கு போலீஸ் 'சம்மன்!'

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (17)
Advertisement
தற்கொலை முயற்சி, உண்மையா, ஓவியா, போலீஸ்,சம்மன்!,

சென்னை: 'நடிகை ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக தங்கி இருந்த போது, தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்' என, போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

தனியார், 'டிவி'யில், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக, சென்னை, நசரத்பேட்டை பகுதியில், வீடு போன்ற பிரமாண்ட, 'செட்' போடப்பட்டு உள்ளது. அதில், பாடலாசிரியர் சிநேகன், நடிகையர் ஓவியா, காயத்ரி ரகுராம், நடிகர்கள், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், மாடலிங் வாலிபர் ஆரவ் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சில தினங்களுக்கு முன், ஓவியாவை மையமாக வைத்தே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. இவர், ஆரவ் மீது, தன் காதலை வெளிப்படுத்தினார். ஆனால், அவர், 'ஓவியாவின் மீது இருப்பது நட்பே; காதல் அல்ல' என, தெரிவித்து விட்டார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, ஓவியா, 'பிக் பாஸ்' வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக, தகவல் வெளியானது.

தற்கொலை முயற்சி உண்மையா?: ஓவியாவுக்கு சம்மன்

பின், 'ஓவியா, 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்' எனவும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார். இருவரும், நிகழ்ச்சி குறித்தும், ஓவியா - ஆரவ் காதல் குறித்தும் பேசினர். இந்த காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்நிலையில், வழக்கறிஞர், எஸ்.எஸ்.பாலாஜி என்பவர், ஓவியா மீதும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, 'பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, தற்கொலைக்கு முயன்றது உண்மையா' என்பது குறித்து, நேரில் விளக்கம் அளிக்கும்படி, ஓவியாவுக்கு, போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

இது குறித்து, போலீசார் கூறுகையில், 'ஓவியா, நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளோம். அவர் வெளிநாட்டில் இருப்பதால், சென்னை திரும்பியதும், காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதாக, அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201712:59:39 IST Report Abuse
மலரின் மகள் வீடியோவில் ஹேர் ஸ்டைல் நன்றாக இல்லை. என்னுடைய சித்தி சொல்வார்கள் அந்த காலத்தில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளிகளின் கம்மல், பட்டு சேலை அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் பார்ப்பதற்காகவே செய்திகளை பார்ப்போர் உண்டாம். சோபனா ரவி பாத்திமா போன்றோர் அதனாலேயே அதற்க்கு தனி முக்கியத்துவம் தருவார்களாம். பியூட்டி பார்லர் சென்று பிரத்யேகமாக அலங்கரித்து வருவார்களாம். நானும் டீ. வி யின் எந்த நிகழ்ச்சி என்றாலும் அவர்கள் காஸ்ட்யூமை பார்ப்பேன். நமக்கு எந்த காஸ்ட்யூம் சரிப்பட்டு வரும் என்பது டீ, வி பார்த்து தேர்ந்து கொள்ளலாம். டீ. வி நிகழ்ச்சியை பார்ப்போர் எல்லோரும் அதன் கருத்துக்களையோ செய்தியை மட்டுமோ பார்ப்பது இல்லை என்பதை தயாரிப்பாளர்கள் புரிந்திருப்பார்களா. பிக் பாஸ் புரிந்து கொள்ள வேண்டும். கமலுக்கு உண்மையிலேயே வயசு ஆகிவிட்டது தான்.
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
13-ஆக-201712:53:27 IST Report Abuse
VOICE bigboss நிகழ்ச்சியில் நல்லவரை காப்பாற்ற வேண்டும் என்று பார்த்து பார்த்து வோட் போட்ட மக்கள் நாம தெருவில் நிற்கும் கவுன்சிலர் நல்லவரா, நாம தொகுதிக்கு நிற்கும் MLA MP நல்லவரா என்று பார்த்து ஓட்டு அளித்தால் அவர்கள் என்றோ காப்பாற்ற பட்டிருப்பார்கள். 500 1000 லஞ்சம் வாங்கி வோட்டை அளித்த பலர் மற்றும் வோட்டை போடாமல் வீடுகளில் இருந்து கொண்டு அரசு சரி இல்லை என்று விமர்சனம் செய்பவர்கள் பலர். . முக்கியமாக அரசியல் கட்சிகளில் வேட்பாளராக நிற்பவர்களை தவிர்த்து நல்லவர்கள் பலர் சுயேட்சையாக போட்டி இடுவதை காணமுடிகிறது அது போன்ற நல்லவர்களை தேர்ந்து எடுத்தாலே தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஆக-201712:12:27 IST Report Abuse
balakrishnan நாட்ல லட்சம் பிரச்சனை இருக்கு, ஆனா நம்ம ஆளுங்களுக்கு எந்த பிரச்சனையில் ஆர்வம்,பாருங்க,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை