சுதந்திர தின அணிவகுப்பு ஆந்திர போலீசார் பங்கேற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தின அணிவகுப்பு ஆந்திர போலீசார் பங்கேற்பு

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுதந்திர தின அணிவகுப்பு ஆந்திர போலீசார் பங்கேற்பு

சென்னை, தமிழக அரசு சார்பில், ஆக., 15ல் நடைபெற உள்ள, சுதந்திர தின விழா அணிவகுப்பில், முதன் முறையாக, நல்லெண்ண அடிப்படையில், ஆந்திரப் போலீசார் பங்கேற்க உள்ளனர். நேற்று நடந்த ஒத்திகை அணிவகுப்பில், அவர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று அனைத்து மாநிலங்களிலும், அந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். அந்தந்த மாநிலப் போலீசார், ஆயுதப்படை போலீசார், அதிரடிப்படை போலீசார், அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்பது வழக்கம்.
இம்முறை, நல்லெண்ண அடிப்படையில், பக்கத்து மாநிலப் போலீசாரை, அணிவகுப்பில் பங்கேற்க வைக்கும்படி, மத்திய உள்துறை, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஆந்திர போலீசார், 54 பேர், சென்னையில் நடைபெற உள்ள, சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

தமிழகப் போலீசார், 54 பேர், ஆந்திராவில் நடைபெறும், சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்க சென்றுள்ளனர். சென்னையில், கோட்டை கொத்தளம் முன், நேற்று காலை, சுதந்திர தின விழா ஒத்திகை நடந்தது. ஆந்திரப் போலீசார், இரண்டு பிரிவாக, அணிவகுத்து வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-ஆக-201711:35:10 IST Report Abuse
அறிவுடை நம்பி 20 தமிழர்களை சுட்ட அதே ஆந்திர போலீஸ் தானே???? தமிழக அரசிற்கு முதுகெலும்பு இல்லையோ ???
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:26:37 IST Report Abuse
Srinivasan Kannaiya இதை மாதிரி எல்லா விஷயத்திலும் இருந்தால் சண்டை சச்சரவே இருக்காது. பங்கு பிரிப்பதிலும் பிரச்சினை இருக்காது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை