கிடப்பில் பெரியாறு அணை பராமரிப்பு மூவர் குழு ஆய்வு எப்போது | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் பெரியாறு அணை பராமரிப்பு மூவர் குழு ஆய்வு எப்போது

Added : ஆக 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 கிடப்பில் பெரியாறு அணை பராமரிப்பு மூவர் குழு ஆய்வு எப்போது

கூடலுார்: முல்லை பெரியாறு அணையில் பி.ஆர்.கே. பிள்ளை தலைமையிலான மூவர் குழுவினர் ஆய்வு செய்து ஓராண்டிற்கு மேலாகிவிட்டது. மீண்டும் ஆய்வுக்கு வராததால் பராமரிப்பு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக, உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தலைவராக மத்திய அணைப்பாதுகாப்பு முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே.பிள்ளை உள்ளார். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனத்துறை செயலர் குரியன் உள்ளனர்.இக்குழு ௨௦௧௬ ஜூலை 7ல் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தியது.

மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டது. மூவர் குழுவிடம், விவசாயிகள் நலச்சங்க செயலர் செங்குட்டுவன் தலைமையில் தமிழக விவசாயிகள் மனு அளித்தனர்.அதில், 'அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். வல்லக்கடவு பாதையை சீரமைக்க வேண்டும். அணைப்பகுதிக்கு 17 ஆண்டுகளாக துண்டிக்கப்பட்டுள்ள மின்இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும்.

தமிழக அதிகாரிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. பரிசீலனை செய்வதாக, மூவர் குழுவினர் கூறிச் சென்றனர்;ஆனால், இதுவரை இதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

இவை அனைத்தும் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளாததால் பராமரிப்பு பணிகள் கிடப்பில் உள்ளன. மூவர் குழுவினர் ஆய்வு நடத்தி விட்டு சென்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் மீண்டும் வரவில்லை.இது குறித்து மூவர் குழுவிற்கு தமிழக அதிகாரிகள் தகவல் தர வேண்டும். குழு அணைப்பகுதிக்கு வரும்போது, இப்பணிகளை நடத்தி முடிக்க தீவிரம் காட்ட வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை