உதவாத மரங்களை நடாதீங்க நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவாத மரங்களை நடாதீங்க நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (12)
Advertisement
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

சென்னை: ''காகித தயாரிப்புக்காக வெட்டும் மரங்களுக்கு ஈடாக, காகித ஆலைகள் நடும் மரங்கள், சுற்றுச்சூழலுக்கு உதவாது. அவர்கள், விவசாயிகளின் நிலங்களில், பயன் தரும் மரங்களை நட முன்வர வேண்டும்,'' என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்திய காகித விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், முன்னணி காகித ஆலை அதிபர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: காகித ஆலை தயாரிப்பு துறை நெருக்கடியில் இருப்பது உண்மை. மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து, குறைந்த விலைக்கு மரங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து, இங்கு ஆலை அதிபர்கள் வருத்தப்பட்டனர். வேறு நாடுகளில் இருந்து, குறைந்த விலைக்கு கிடைக்கிறது. ஆனால், அது நன்மையா, தீமையா என தெரியவில்லை.

'ஒரு மரத்தை வெட்டினால், அங்கு இரண்டு மரங்களை நட்டு, சுற்றுச்சூழல் பாதிக்காமல் பார்த்து கொள்ளப்படுகிறது' என, இங்கு பேசியவர்கள் கூறினர். நீங்கள் நடுகிற, 'சுபாபுல்' வகை மரங்கள், நிழல் தராது; பழம் தராது; பறவைகள் கூட உட்காராது. அதை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக கூறுவது, ஏற்புடையது அல்ல. அதற்கு பதிலாக, விவசாயிகளின் நிலங்களில், பயன் தரும் மர வகைகளை நடுங்கள். தரிசாக கிடக்கும் ஏராளமான நிலங்களில், மரங்களை நடுங்கள். இவ்வாறு செய்தால், ஏழை விவசாயிகளுக்கு, உங்கள் வாயிலாக வருவாய் கிடைக்கும். இவ்வாறுஅமைச்சர் பேசினார்.

இந்திய காகித உற்பத்தியாளர் சங்க தலைவர் சவுரவ் பங்கர் பேசும்போது, ''மரத் தடிகள் இறக்குமதி, 36 சதவீதமாக, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அதில், ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி, 67 சதவீதமாக உள்ளது. நாட்டில் விளையும் மரங்களை வைத்து, காகிதங்களை தயாரிக்கும் நிலை உருவாக வேண்டும். அதற்கு தேவையான உதவியை அரசு வழங்க வேண்டும்,'' என்றார்.

ஐ.டி.சி., நிறுவனத்தின் காகித ஆலை பிரிவு தலைவர் சஞ்சய் சிங், சேஷசாயி காகித ஆலை தலைவர் என்.கோபாலரத்னம், சென்னை காகித விற்பனையாளர்கள் சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
13-ஆக-201720:22:31 IST Report Abuse
srisubram கரெக்ட் , ஆலை அதிபர்கள் சிந்தித்து செயல் படவேண்டும் , உதவும் , மரங்களான , அரசு , ஆலம், வேப்பம், இவற்றால் , காற்றும் சுத்திகரிக்கப்படும் , வெய்யிலின் தாக்கமும் இருக்காது , எரு வும் கிடைக்கும் .. இங்கே , மரம் விற்கும் வியாபாரிக்கு பணம் போனால் , அவன் இங்கு செலவு செய்வான் , வெளிநாட்டிற்கு சென்றால் , பணம் அங்கு தானே போகும் . நமக்கு நம் விவசாயி வேண்டுமா இல்லை வெளி நாட்டவர்கள் வேண்டுமா ? மரம் என்ன உணவுப்பொருளா. மேலும் , இயற்கையை பேண நம்மாழ்வார் சொன்னது , இங்குள்ள மரங்களை நட வேண்டும் ..அதை தான் இந்த மந்திரி சொல்லியுள்ளார் .
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
13-ஆக-201713:23:45 IST Report Abuse
arabuthamilan இந்தோனேஷியா, மலேஷியா போன்ற இந்தியாவை விட எத்தனையோ மடங்கு சிறிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோமே. கேவலமாகத் தோன்றவில்லை. நமக்கும் எவ்வளவோ வனங்கள் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன. அங்கு பயிரிட்டால் அல்லது மரங்களை நட்டால் குறைந்தா போய்விடுவோம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில். ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில். எல்லாம் நல்ல படியாக நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Cheran - Kongu seemai,இந்தியா
13-ஆக-201710:49:45 IST Report Abuse
Cheran நாங்க உதவாத அரசையே தேர்ந்து எடுத்து இருக்கோம். அது பயன்கொடுக்காட்டியும் பரவா இல்லை. ஆனால் இருப்பதையும் உறிஞ்சாமல் இருந்தால் புண்ணியமாக போகும்.
Rate this:
Share this comment
Cancel
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
13-ஆக-201710:22:59 IST Report Abuse
Naam thamilar நீயே உதவாத மந்திரி தான். என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள். Ball is in your court now.
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-ஆக-201710:13:36 IST Report Abuse
அறிவுடை நம்பி அதுதான் பார்க்கிறோமே ...மத்தியிலும் மாநிலத்திலும் உதவாத மரங்களை நட்டு விட்டு தவிக்கிறோமே....உயிர் காற்றே இல்லையே ...
Rate this:
Share this comment
Cancel
Viswanathan s - singalpadi,இந்தியா
13-ஆக-201708:41:36 IST Report Abuse
Viswanathan s ஓஹோ...அப்படியா...?
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
13-ஆக-201708:41:12 IST Report Abuse
Varun Ramesh பயன்படாத அரசியல்வாதிகளை சகித்துக்கொள்ள பழகிய நாடு, பயன்படாத மரங்களை நடுகிறவர்களையும் சகித்துக்கொள்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:24:31 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லா மரங்களும் உயிர் காற்றை வெளியே விட்டு கெட்ட காற்றை சுவாசிக்கிறது... ஒன்றை பாருங்கள் ...கரிமில வாயு மனிதனுக்கு ஆகாது ஆனால் மரத்திற்கு ஆகும்... பிராணவாயு மரம் வேண்டாம் என்று வெளியே தள்ளுகிறது அது மனிதனுக்கு ஆகும்...
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201707:17:16 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) //// மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து, குறைந்த விலைக்கு மரங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து, இங்கு ஆலை அதிபர்கள் வருத்தப்பட்டனர்//// குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதால் வருத்தப்பட என்ன இருக்கிறது, குறைந்த விலை என்பது மகிழ்ச்சிதானே.. அதுலே highlight நன்மையா தீமையா எனபதும் அமைச்சருக்கு தெரியாதாம். ...
Rate this:
Share this comment
Cancel
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201707:01:10 IST Report Abuse
Kumar நாட்டில் நிறைய தலை வர்கள் உதவாமல் தான் இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
13-ஆக-201711:08:39 IST Report Abuse
Ramanஇவரையும் சேர்த்து...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை