பத்திர பதிவுத்துறை இணையதளத்தால்...எளிதாகிறது ஆவண பதிவு ! 'ஆன்லைன்' முறைக்கு தொடர் பயிற்சி | Dinamalar

தமிழ்நாடு

பத்திர பதிவுத்துறை இணையதளத்தால்...எளிதாகிறது ஆவண பதிவு ! 'ஆன்லைன்' முறைக்கு தொடர் பயிற்சி

Added : ஆக 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 பத்திர பதிவுத்துறை இணையதளத்தால்...எளிதாகிறது ஆவண பதிவு !  'ஆன்லைன்' முறைக்கு தொடர் பயிற்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, சார்பதிவாளர் அலுவலகத்தில், 'ஆன்லைன்' முறையில், ஆவணங்கள் பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமலாக்கப்பட உள்ளது. இதற்காக பத்திர பதிவுத்துறை சார்பில், ஆவண எழுத்தர்களுக்கு, பயிற்சி நேற்று வழங்கப்பட்டது.தமிழகத்தில், சொத்து, திருமணப்பதிவு, கிரயம் என அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்யும் வகையில், 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அங்கு, ஆவண எழுத்தர்கள் மூலமாக ஆவணங்கள் மற்றும், முத்திரைத்தாள் தயார் செய்து, கட்டணம் செலுத்திய பின், சார்பதிவாளரிடம் பதிவிற்காக ஒப்படைக்கப்படும். விசாரணை செய்த பின், ஆவணங்கள் பதிவு செய்யப்படும். இந்த நடைமுறையே பல ஆண்டு காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில், காலதாமதம் ஏற்படுவதால், பத்திர பதிவுத்துறையினர் 'ஆன்லைன்'ல் பதிவு செய்யபுதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை மற்றும் கோமங்கலம் உட்பட சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களிலும், ஆவணப்பதிவுக்கு, 'ஆன்லைன்' முறை செயல்படுத்தப்பட உள்ளது.மாநிலத்தில், தற்போது, 50, சார்பதிவாளர் அலுவலகங்களில், புதிய நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. மற்ற பகுதிகளிலும், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக ஆவண எழுத்தர்களுக்கும், மக்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை, கோமங்கலம் அலுவலகத்துக்குட்பட்ட ஆவண எழுத்தர்களுக்கான பயிற்சி முகாம், பொள்ளாச்சி தனியார் கல்லுாரியில்நடந்தது. கோவை மண்டல துணை பதிவு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:தற்போது, நடைமுறையில், 'ஸ்டார்-1', என்ற முறையில், ஆவண எழுத்தர்கள் மூலமாக ஆவணங்கள் தயார் செய்து, பத்திரம் பதிவு செய்தல் எழுத்துப்பூர்வமாக நடைபெற்றது. இந்த முறையில் மாற்றம் செய்து, 'ஸ்டார் -2.0', என்ற இணைய மென்பொருள் வாயிலாக ஆவணப்பதிவு செய்யும் திட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆவண எழுத்தர்கள், tnregistration.in/portalஐ பயன்படுத்தி, பயனர் கணக்கு, கடவுச் சொல் (பாஸ்வேர்டு), உருவாக்கி கொள்ள வேண்டும். ஆவண எழுத்தர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும், 'ஆன்லைன்' மூலமாக பத்திரம் பதிவு செய்யலாம். பொதுமக்கள் பதிவு செய்யும் முறை குறித்து தெரிந்தால், 'சிட்டிசன்' போர்டலுக்கு சென்று, போதிய விபரங்களுடன் பதிவு செய்யலாம்.'ஆன்லைன்' மூலமாகவே, சார்பதிவாளர் சந்திக்க நேர அனுமதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த முறையில், பதிவு செய்யப்படும் விபரங்கள், சார்பதிவாளர் சரிபார்த்த பின், திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென்றால் அப்படியே மேற்கொள்ளலாம்.பின், சரியாக உள்ளதா என சரிபார்த்து, அவற்றை பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் முத்திரைத்தாள் வீணாகுதல் தவிர்க்கப்படும்; நேரம் குறையும்; போலி சான்றிதழ்கள் பதிவு செய்வதை தடுக்கலாம். ஆள் மாறாட்டம் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்கள் உள்ளன. ஒரு பெயரில், ஆவணம் பதிவாகிவிட்டால், அந்த சொத்து மீண்டும் மற்றொரு பெயரில் பதிவு செய்ய இயலாது. தற்போது, மாதிரியாக குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதிலுள்ள, குறைகள், நிறைகள் தெரிந்த பின், அவையும் சரி செய்து, முழுமையாக திட்டம் கொண்டு வரப்படும்.மாநிலம் முழுவதும், படிப்படியாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இந்த முறை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை