முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து பாதிப்பு: விவசாயிகள் கவலை | Dinamalar

தமிழ்நாடு

முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து பாதிப்பு: விவசாயிகள் கவலை

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முன்பட்டம், குறுவை, பயிர்கள், பாதிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் டெல்டா பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மிதப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சிதம்பரம் டெல்டா பகுதியில் போதிய மழையின்மை; மேட்டூரில் தண்ணீர் இன்மை போன்ற காரணங்களால் ஒரு போக சம்பா சாகுபடியாவது செய்ய முடியுமா என விவசாயிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது. ஆழ்துளை கிணறு போர்வெல் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் குறைந்த அளவு நிலப்பரப்பில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக தென் மேற்கு பருவ மழை பெய்யாமல் கடும் வெயில் தாக்கம் காணப்பட்டது. இதனால் சிதம்பரம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதற்கிடையே பாடுபட்டு தண்ணீர் பாய்ச்சி வளர்த்த நெற்பயிர்கள் தற்போது வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சிதம்பரம் டெல்டா பகுதியில் மாலை நேரங்களில் காற்றுடன், மழை பெய்து வருகிறது. இதனால், முன்பட்ட குறுவை சாகுபடி நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. தொடர்ந்து நெற்பயிர்கள் தண்ணீரில் கிடப்பதால் நெல் மணிகள் தண்ணீரில் நனைந்து ஊறி முளைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை