புதுச்சேரி-ஐதராபாத் விமான சேவை 16ம் தேதி துவக்கம்: நாராயணசாமி| Dinamalar

இந்தியா

புதுச்சேரி-ஐதராபாத் விமான சேவை 16ம் தேதி துவக்கம்: நாராயணசாமி

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
புதுச்சேரி, ஐதராபாத், விமானசேவை, துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு விமான சேவை 16ம் தேதி துவங்குகிறது என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கும், விஜயவாடாவிற்கும் விமான சேவை தொடங்குவதற்கான விழா, 16ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக விமான நிலையம் மூடப்பட்டு கிடந்ததால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. விமான சேவை தொடங்கப்படுவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி மட்டுமின்றி, வியாபாரமும் வளர வாய்ப்பு உள்ளது.
முதல் கட்ட விமான சேவைக்கு பின்னர், புதுச்சேரியில் இருந்து பெங்களூர், திருப்பதி, கொச்சின், கோவை ஆகிய நகரங்களுக்கும் விமான சேவை தொடங்க வலியுறுத்தி வருகிறோம். அதுபோல் ஒதிசா ஏர் நிறுவனம், புதுச்சேரியில் இருந்து சேலம், பெங்களூர், சென்னை ஆகிய ஊர்களுக்கு சிறிய விமானத்தை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளது.
புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்க, மத்திய கப்பல் துறை அமைச்சர் முன்னிலையில், சென்னை துறைமுகத்துடன் ஒப்பந்தம் செய்து வேலை நடந்து வருகிறது. கப்பல் வந்து செல்ல 3 லட்சம் கியூபிக் மீட்டர் மணலை அகற்ற வேண்டும். இதற்காக டி.சி.ஐ., நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி 95 சதவீத பணியை முடித்து விட்டது.இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஒரு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து,
முட்டுக்கட்டை போடும் பணியை ஆரம்பித்துள்ளது. தொழிற்சாலைகள் வருவதற்கு துறைமுகம் மூலம் சரக்கு போக்குவரத்து நடைபெற வேண்டும். அப்போதுதான் புதுச்சேரியின் பொருளாதாரம் உயர்ந்து, வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
காரைக்கால் துறைமுகம் செயல்படுவதன் மூலம் நடப்பு காலாண்டிற்கு ரூ.3.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, துறைமுக திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.புதுச்சேரியில் விமான திட்டம், மத்திய அரசின் உதான் திட்டத்திற்குள் வந்துவிட்டதால், விமான நிறுவனத்திற்கு மாநில அரசு மானியம் எதுவும் தர வேண்டியிருக்காது. ரூ.2,500 மட்டுமே கட்டணமாக பயணிகளிடம் வசூலிக்கப்படும்.
மீதி கட்டணத்திற்கான நிதியை மானியமாக, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம்,விமான நிறுவனத்திற்கு வழங்கும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
14-ஆக-201708:18:34 IST Report Abuse
Barathan This air travel program will be utter failure
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை