குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமில்லை: யோகி விளக்கம்| Dinamalar

குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமில்லை: யோகி விளக்கம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
உ.பி., குழந்தைகள் உயிரிழப்பு, யோகி ஆதித்யநாத்
Share this video :
உ.பி.யில் குழந்தைகள் இறப்பு: யோகி விளக்கம்

லக்னோ : உத்திர பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார்.

உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் 30 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஆதித்யநாத் விளக்கமளித்தார். குழந்தைகள் இறப்பு விவகாரத்தை தலைமைச் செயலாளர் தலைமையிலான கமிட்டி விசாரிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் , இவ்விவகாரம் குறித்து நீதித்துறை அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார். கடந்த 9 ஆம் தேதி கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வரை தான் சந்தித்து பேசியதாகவும், அப்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து எந்தத் தகவலும் தன் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆக்ஸிஜன் விநியோகஸ்தருக்குரிய தொகையை கடந்த 5 ஆம் தேதியே அரசு கொடுத்துவிட்டதாக கூறிய முதல்வர், இதில் அரசின் மீது தவறா அல்லது ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் தொகையை தராத கல்லூரி முதல்வர் மீது தவறா என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (89)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஆக-201722:06:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என் கேள்வி ரொம்ப சிம்பிள். அப்போ இறப்புகள் ஆக்சிஜன் வந்தவுடன் எப்படி சட்டென்று நின்று விட்டன?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஆக-201721:32:41 IST Report Abuse
D.Ambujavalli வெண்டைக்காய் கூட்டுக்கு விளக்கெண்ணெய் தாளித்தது போன்ற பதில் இந்நேரம் காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்தால் மோடிஜிக்கும், ஷாவுக்கும் வாய் காதுமட்டும் கிழிந்திருக்கும் உயிரின் அருமை தெரியாத ஜென்மங்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201718:32:43 IST Report Abuse
Srinivasan Kannaiya என்னதான் காரணம் சொன்னாலும் உங்களுடைய ஆட்சியில் ஒரு விரிசல் விழுந்துவிட்டதே...
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201717:15:48 IST Report Abuse
Rahim பிஆர்டி மருத்துவமனையில் சம்பவத்தை நேரில் பார்த்த கெளரவ் திரிபாதி என்பவர் கூறுகையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது, செய்வதறியாது அனைவரும் திகைத்த போது டாக்டர் ....... சமயோசிதமாகச் செயல்பட்டார். உடனே தனது மருத்துவ நண்பர்களுக்கு போன் பண்ணினார். அவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டார். அதனையடுத்து தனது காரை எடுத்துக்கொண்டு விரைந்தார். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே ஆக்சிஜன் பிஆர்டி மருத்துவமனையில் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, வெளியில் சென்று 3 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்தார். அதுவும் அரைமணி நேரம்தான் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என்ற நிலை ஏற்பட்டது. உடனே, மேலும் 10 சிலிண்டர்களை வெளியில் வாங்கி வந்து பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றினார். தனது சொந்த செலவில், இதை டாக்டர் ...... இதைச் செய்தார், இப்போது கூறட்டும் சொம்புகள் அங்கு டாக்ட்டரின் அலட்சியத்தால் தான் நடந்தது அரசிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்ட்டரின் பெயரை நீக்கியுள்ளேன் ஏன் என்றால் அதை வைத்தும் மத அரசியல் செய்து என்னை கொல்வார்கள் யோக்கிய சொம்புகள், ஒரு புறம் விளம்பர அரசு செயல் இழந்து நின்றபோது மறுபுறம் மனிதநேயம் பல பிஞ்சுகளின் உயிர்களை கைப்பற்றியது சற்று ஆறுதல்.
Rate this:
Share this comment
Cancel
tamilan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201716:48:05 IST Report Abuse
tamilan yokiyan varan somba eduthu ulla vai
Rate this:
Share this comment
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
13-ஆக-201716:35:46 IST Report Abuse
pazhaniappan யோகிநாத்துக்கு பூங்காவிலிருக்கும் காதலர்களைப் பற்றி கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள் , மாடுகளை ஏற்றிச்செல்லும் லாரிகளைப்பற்றி கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள், குழந்தைகள் மருத்துவமனையில் oxygen பற்றாக்குறை என்பது கவனத்துக்கு கொண்டு வரவில்லையா ? நீர் எதைப்பற்றி கவலைப்படுகிறீரோ அதைப்பற்றித்தானே உமது அடிமைகள் உமது கவனத்துக்கு கொண்டு வருவார்கள் உமது விசாரணை கமிஷனால் இறந்த உயிர்கள் திரும்ப வந்துவிடுமா ,நீர் சொல்வதுபோல் கல்லூரி முதல்வர் தவறு செய்திருந்தால் அதில் உமக்கு பொறுப்பில்லையா .தடம் புரண்டு ரயில் கவிழ்ந்தால் ,கொசுவால் நோய் பரவுவதெற்கெல்லாம் அரசை குறைசொன்னா பிஜேபி காரர்களுக்கு இப்போ கவனக்குறைவால் .அஜாக்கிரதையால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நீங்கள் காரணமில்லை ,காதலர்களும் ,காளைகளும் யோகிக்கு தெரிந்த சமாச்சாரம் ,குழந்தைகள் அவருக்கு தெரியாத சமாச்சாரம் தானே
Rate this:
Share this comment
Cancel
Rajan. - singapore,சிங்கப்பூர்
13-ஆக-201715:59:36 IST Report Abuse
Rajan. நாடு நன்றாக இருக்கவேண்டுமானால் அரசியல்வாதி, வக்கீல் ,போலீஸ் , நீதிபதி இவர்கள் நேர்மை முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
Balan Palaniappan - Chennai,இந்தியா
13-ஆக-201715:50:51 IST Report Abuse
Balan Palaniappan மக்களே ஜாக்கிரதை
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
13-ஆக-201715:45:47 IST Report Abuse
SaiBaba திரு. யோகி அவர்களே. ஒவ்வொரு உயிரும் முக்கியம். உயிரின் முக்கியத்துவத்தை பெற்ற தாயிடம் கேளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201715:37:06 IST Report Abuse
PRABHU இப்பிடி பொய் சொல்லி சொல்லி நாட்டுமக்களை ஏமாத்துங்கோ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.