ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார் : டிரம்ப் அறிவிப்பு| Dinamalar

ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார் : டிரம்ப் அறிவிப்பு

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (19)
Advertisement
டிரம்ப், வடகொரியா

வாஷிங்டன் : வட கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான இலக்கை முழு ஆயுத பலத்துடன் குறிவைத்து விட்டதாகவும், ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சமீப காலமாக வடகொரியா 5 முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது . மேலும், பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.

இதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா ராணுவம், தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழு ஆயுத பலத்துடன் தயார் நிலையில் இருக்கிறோம். வடகொரியா அறிவீனமாக நடந்து கொள்ள முயற்சித்தால் அதற்கான மாற்றுப் பாதையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு

அத்துடன் குவாம் ஆளுநர் குவாம் எட்டி பசா கால்வோவை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை நடத்தினார் . அமெரிக்கா 1000 சதவிதம் குவாம் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார். மக்களை தைரியமாக இருக்க சொல்லுங்கள் என்று குவாம் ஆளுநர் எட்டியிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டார். இதனால், வட கொரியா - அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் வலுவடைந்து வருவதாகவும், விரைவில் இருநாடுகளும் தங்களது ஆயுத பலத்தை பரிசோதிக்க முயலக்கூடும் என்றும் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Subramanian - Bangalore,இந்தியா
13-ஆக-201719:05:52 IST Report Abuse
Bala Subramanian என்னக்கு என்னமோ அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் போர் வராது என்று தான் நான் நினைக்கறேன் ஏன் என்றால் இன்றய நிலைமைக்கு போர் வந்தால் அது மூன்றாம் உலக போர் ஆக மாறிவிடும் அது மாத்திரம் இல்லாமல் அமெரிக்காவுக்கு சப்போர்ட் பண்ண வட அட்லாண்டிக் நாடுகள் வரும் அதே மாதிரி வடகொரியாவுக்கு சப்போர்ட் பண ரஷ்யா மற்றும் சீனாவும் போரில் இறங்கும் இப்போ இருக்கிற சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா கிட்ட மோர் தான் 7000 அணு ஆயுதங்கள் இருக்கு இவங்க இரண்டு பெரும் சண்டை போட்டாலே உலகம் அழிஞ்ச மாதிரிதான்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201715:40:14 IST Report Abuse
Lion Drsekar குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்க நீங்கள் இருக்க எங்களுக்கு என்ன கவலை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Methai , Manavai - Chennai,இந்தியா
13-ஆக-201719:56:58 IST Report Abuse
Methai , Manavaiவந்தே மாதரம் எஙகு சொல்ல வேண்டுமோ அங்கு மட்டும் போதும்- எங்கும் தேவையா?...
Rate this:
Share this comment
Cancel
Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா
13-ஆக-201715:29:24 IST Report Abuse
Raja (Thravida Veriyan) வட கொரிய அதிபர் போருக்கு முன்பு - கிம் ஜாங் உன் போருக்கு பிறகு - ஜிங் ஜல் ஜக்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை