40 ஆண்டுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

40 ஆண்டுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
40 ஆண்டுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் ஒன்று கூடி பழைய நினைவுகளை அசை போட்டனர்.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் 1972ம் ஆண்டு முதல் 1978 ம் ஆண்டு வரை ஏ பிரிவில் படித்த 40 மாணவர்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இருக்கிறார்கள்.
இவர்கள் மீண்டும் தாங்கள் படித்த வகுப்பறையில் சந்திக்க முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் கடந்த 12 ம் தேதி இவர்களில் 26 பேர், எஸ்.எல்.பி. பள்ளியில் தங்கள் வகுப்பறையில் ஒன்று கூடினர்.
படித்த காலத்தில் செய்த சேட்டைகளைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், தற்போது தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நடந்த முக்கிய நிகழ்வுகள், செய்யும் பணி ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களான கிருஷ்ணன், ஜஸ்டஸ் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
14-ஆக-201711:11:33 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam பூக்களில் வாடாத குணமுடைய பூ வாடாமல்லி, ஆனால் அதற்கு கூட ஆயுள் ஓரிரு மாதங்கள் தான், மலர்கள் கூட சூரியனை பாத்தால் தான் மலரும் ஆனால் "நட்பு" எனும் மலரோ எண்ணத்தில் வந்தாலே, ஒருவரின் வாடிய முகம் கூட மலரும். அடடே ... ஆச்சரிய குறி.. இதனை எப்படித்தான் 2047 ஆண்டுகள் முன்னே உணர்ந்து திரு வள்ளுவர் தனது பொருட்பாலில் -நட்பு அதிகரத்தில் குறிப்பிட்டுள்ளாரோ புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். ( குறள் எண் : 785 ) பொருளுரை: சாலமன் பாப்பையா : ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும். இங்க்கே நிஜ எடுத்துகாடாக் வாழும் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் நட்பு. வியக்கவைக்கிறது மலைக்க வைப்பது செய்தி தானே
Rate this:
Share this comment
Cancel
morvdr - Chenai,இந்தியா
13-ஆக-201718:32:58 IST Report Abuse
morvdr அருமையான நிகழ்வு. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201714:26:55 IST Report Abuse
K.Sugavanam வாழ்த்துக்கள்..நீங்காத நினைவுகள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை