தென்மேற்கு பருவமழை இயல்பை விட 21 சதவீதம் அதிகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 21 சதவீதம் அதிகம்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தென்மேற்கு பருவமழை, சென்னை வானிலை ஆய்வு மையம், மழை, மேலடுக்கு சுழற்சி

சென்னை: தென்மேற்கு பருவமழை இயல்பை விட 21 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு தமிழகம், மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் 14 செ.மீ., மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருப்பத்தூர், திருவையாறு பகுதிகளில் தலா 10 செ.மீ., மழையும், மதுரை, திருப்புவனத்தில் தலா 9 செ.மீ மழையும், அரிமலம், கள்ளக்குறிச்சி, செஞ்சி ,செங்கம், மயிலம் பகுதிகளில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை 21 சதவீதம் அதிகம்

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு.
கடந்த 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பதிவான தென்மேற்கு பருவமழையின் அளவு 177 மி.மீ., . இதே காலகட்டத்தில் பதிவாகும் இயல்பான மழையின் அளவு 146 மி.மீ., இந்த வருடம் இயல்பை விட 21 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Chennai,இந்தியா
16-ஆக-201718:01:39 IST Report Abuse
தமிழன் காங்கேயம் வட்டம், பரஞ்சேர்வழி பகுதியில் மழையே இல்லை இதுல வழக்கத்தை விட அதிக மழைன்னு பொய் சொல்றீங்க
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
13-ஆக-201723:41:44 IST Report Abuse
X. Rosario Rajkumar தூர் வாரி இருந்தால் நிறைய நீரை சேமித்து இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
13-ஆக-201722:59:58 IST Report Abuse
Rpalnivelu ஜெயாவோட மழை நீர் சேமிப்பும் போயிற்று, அமைச்சர்கள், அதிகாரிகளின் பயமும் போய் விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை