நீட் விவகாரம்: அவசர சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் நாளை வழங்கப்படும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் விவகாரம்: அவசர சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் நாளை வழங்கப்படும்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீட் தேர்வ, அவசர சட்டம், விஜயபாஸ்கர், நிர்மலா

சென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை மத்திய அரசிடம் வழங்கப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து, தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதனையடுத்து முதல்வர் பழனிசாமியுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை காலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும். சட்டத்திற்கு நிச்சயம் ஒப்புதல் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

Powered by Vasanth & Co

எந்த சட்ட சிக்கலும் ஏற்படாத வகையில் மத்திய அரசு ஆலோசித்து, நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு குழப்பம் ஏற்படாத வகையில் நீட் விவகாரத்தில் தமிழக அரசு திடமான முடிவு எடுக்கும். எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு கூறவில்லை. கடந்த ஆண்டு நடந்தது போல், இந்த ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என நம்புகிறேன். சுகாதார செயலர் உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இன்று மாலை டில்லி செல்ல உள்ளனர். ஓராண்டு விலக்கு பெற மிக மிக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டுக்கு நீட் தேர்வில் மிக விரைவில் விலக்கு பெற முடியும். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajendrenS -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201723:49:12 IST Report Abuse
RajendrenS First they say neet is the only eligible exam. They pass law conduct exam after publishing results they will cancel exam. Nobody bothered about extraordinary hard work by them. They will send them out and give seats as per their wish. Are we live in democracy? only time and supreme court can help. If this law is d in the year starting. It is ok. But now around 4000 students and parents are made heart attack. Please save them.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஆக-201721:35:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தாமரை மலராது.
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
13-ஆக-201721:02:09 IST Report Abuse
SANKAR சட்டத்திட்டம் மனிதர்களுக்காகவே தவிர சட்டதிட்டத்திற்க்காக மனிதர்கள் இல்லை.. நீட் சிலபஸில் 11 -12 வகுப்பு பாடங்களை வைத்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.. தமிழக மாணவர்கள் 11 ஆம் வகுப்பு பாடங்கள் பழைய திட்டத்தில் படித்துவிட்டு எப்படி நீட்தே ர்வு சரியாக எழுதமுடியும்... உள்ளபடியே மத்திய அரசிற்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருக்குமானால் மூன்று ஆண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும்... பாடத்திட்டங்களை மாற்றி புது பாடத்திட்டத்தில் 11 ,12 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்வரை...
Rate this:
Share this comment
Cancel
ber - tuticori,இந்தியா
13-ஆக-201720:24:39 IST Report Abuse
ber நம்புவோம் உச்ச நீதி மன்றத்தை
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
13-ஆக-201719:52:50 IST Report Abuse
Sekar KR அவசர சட்டம் கொண்டுவந்தால் NEET எழுதிய மாணவர்கள் அதற்க்கு தடை கோரி மீண்டும் உச்சநீதி மன்றம் நாடுவது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
13-ஆக-201719:46:13 IST Report Abuse
Arivu Nambi பி .ஜே .பி யின் எல்லா நாடகங்களும் 2019 ஐ மனதில் வைத்துதான் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் அமைதியாக இருந்து போராட்டத்தை உச்சக்கட்டத்திற்க்கு கொண்டுவந்து ,பிறகு எப்படி சட்டம் கொண்டுவருவது என்று பன்னீரிடம் கூறி தமிழக மக்களிடம் பி .ஜே .பி தான் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்தது போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியது ,அதேபோல இப்போது நீட்டிலும் இறுதிவரை அமைதியாக நாடகம் ஆடிவிட்டு, தமிழகத்தை கோவத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்று இப்போது அவசர சட்டம் கொண்டுவந்து தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்த முயற்சிக்கிறது .இப்படி எல்லாவிஷயத்திலும் நாடகம் ஆடித்தான் மஸ்தான் தன்னை குஜராத்திலேயே நிலைநிறுத்தினார்,{கடந்த ராஜ்யசபா தேர்தலே சமீபத்திய உதாரணம் } அதன் உச்சகட்ட விஷம நடவடிக்கைதான் 2002 .அதை ஏணியாக பயன்படுத்தி வடஇந்திய மக்களை முட்டாள்களாக்கி தற்போதைய பதவியை பிடித்துள்ளார் ,அதே போன்றதொரு முறையை தமிழகத்திலும் உருவாக்கி காலூன்றுவதற்கான விஷம நடவடிக்கைதான் இந்த நீட்....தமிழர்கள் ,குஜராத்திகள் போலவோ அல்லது மற்ற வடஇந்தியர்கள் போலவோ செம்மறியாட்டு கூட்டம் கிடையாது என்று மஸ்தானுக்கு பாடம் புகட்டுவார்கள் .....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-ஆக-201716:42:37 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM தமிழன் ன்னா இளிச்சவாயன்... காக்கவிட்டு தான் தருவானுக... நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தேவை.... தமிழக கோட்டாவில் படித்த மருத்துவர்கள் தான் இன்று உலகெங்கும் பிரபல மருத்துவர்கள்... தமிழகம் மருத்துவ சுற்றுலா நகராக மாறுவதற்கு காரணம் தமிழக அரசின் செயல்பாடு மற்றும் தமிழக மருத்துவர்களால் தான்... நீட் தேர்வை கொண்டுவந்தால் பாஜகவுக்கு டெப்பாசிட் கூட கிடைக்காது...
Rate this:
Share this comment
Cancel
Rassi - nellai,இந்தியா
13-ஆக-201716:39:46 IST Report Abuse
Rassi ஏற்கனவே நீட் தேர்வு எழுதி காத்திருக்கும் தமிழக மாணவர்களின் கதி என்னவாகும் ஒரு வருடம் படித்து நீட் எழுதியவர்களுக்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
MalaiArasan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201716:27:02 IST Report Abuse
MalaiArasan தமிழக அரசே, இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் . CBSE Students நாங்கள் பெரிதும் பாதிக்கபடுவோம்.
Rate this:
Share this comment
Cancel
Anand Rao.v - Chennai,இந்தியா
13-ஆக-201716:06:29 IST Report Abuse
Anand Rao.v கும்பி கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு அழுவுதாம். 85% சதவீதம் மாணாக்கர்கள் நாட்டுப்புறத்தினரா? உங்கள் அக்கறை எல்லாம் மருத்துவப்படிப்புக்கு அனுமதி அளிக்க கமிஷன் அதாவது கட்டிங் கழகக்கண்மணிகளுக்கு கிடைக்காமல் போகுமே என்பது தான். நீட் தேர்வு எழுதி தேர்வு பெற உங்கள் மாணவர்களை தயார் செய்யுங்கள். சும்மா பழனி சாமி இதற்காக விmக்கு கேட்க டில்லி செல்ல வேண்டாம் . கட்டிங் கிட்டாதாயின் வெட்டென மறக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை