நீட் தேர்வு விவகாரம்: முதல்வர் ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: முதல்வர் ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீட் விவகாரம், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், பா.ஜ., திமுக, ஸ்டாலின், ராஜினாமா

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. இதற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நீட் விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்த முதல்வர், அமைச்சர்கள்,எம்.பி.,க்கள் அனைவரும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தீர்வு காண்போம் என மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தது ஏமாற்று நாடகம். நீட் விவகாரம் முடிந்து போன ஒன்று என தம்பிதுரை கூறியது அதிர்ச்சியளிக்கிறது. எம்.பி.,க்கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டு தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் தன் பதவியை ராஜினாமா செய்ய அவரே முன்வர வேண்டும்.அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாக திணித்து சமூக நீதியை மத்திய அரசு சாகடித்துள்ளது. நீட்வழக்கு விசாரணையில் இருக்கும் போது மத்திய அரசு அவசர அவசரமாக நீட் தேர்வை திணித்துள்ளது. தமிழக அரசின் இரு மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. சட்டசபை நிறைவேற்றிய அந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட வேண்டும். பா.ஜ., அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கூட்டாட்சி என பேசிக்கொண்டு உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.முதல்வர் ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - Dindigul,இந்தியா
14-ஆக-201701:50:55 IST Report Abuse
Krishna இந்த ஆளுக்கு தூக்கத்துல கூட ஆட்சி ஆட்சி நீட் நீட் னே கனா கண்டுட்டே ஒளறிட்டே இருப்பான்னு நெனைக்கிறேன்.... கருமாந்திரம்...
Rate this:
Share this comment
Cancel
Swami - Abuhalifha,குவைத்
14-ஆக-201700:13:21 IST Report Abuse
Swami Stupid actions and cheat students to keep distance from AIIMS, JIPMER, JEE AND OTHER COMPETITION.STUPID POLITICIANS DON'T KNOW TO PASS NEET REQUIRED FOR ABROAD MEDICAL COURSES AS PER MCI.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
13-ஆக-201723:46:47 IST Report Abuse
Renga Naayagi கழக கண்மணிகள் நீட் ஆக தானே தண்ணியடிக்க விரும்புவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை