அன்றாட நிகழ்விலும் கமல் சுறுசுறுப்பு: அரசியலுக்கு அச்சாரமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்றாட நிகழ்விலும் கமல் சுறுசுறுப்பு: அரசியலுக்கு அச்சாரமா?

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (71)
Advertisement
கமல், சுறுசுறுப்பு, அரசியல்,  அச்சாரம் , தமிழகம், நீட்தேர்வு

சென்னை: தமிழக அரசியலில் அவ்வப்போது புதுப்புது டுவிட்டுகளை பதியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல் தற்போது தமிழக மக்கள் மீது முழுக்கவனம் செலுத்த துவங்கியுள்ளார். நடிகர் கமலஹாசன் முதன்முதலாக தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது, எந்த துறையில்தான் ஊழல் இல்லை என தெரிவித்தார். இதற்கு ஆளும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்து சுதந்திரத்தை முடக்குவதா என பல்வேறு தரப்பினரும் ஆளும்கட்சிக்கு கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கமல் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில், சில முக்கிய விஷயங்களை பேசி வருகிறார்.


நீட் தேர்வு விவகாரம்

தற்காலிகமாக ஓராண்டுக்கு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா அறிவித்தார். உடனே, நீட் தேர்வு தொடர்பாக இன்று அவசரசட்ட முன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழக பிரதிநிதிகள் டில்லியில் மத்திய அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.


பிற்பாடும் பேரம் பேசலாம்

இந்நிலையி்ல கமல் இன்று ( 13 ம் தேதி ) அவர் பதிவிட்ட முதல் டுவிட்டில் " உபி.,யில் மருத்துவமனையில் பலர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துள்ளனர். இது போல் இனியும் நடக்க கூடாது " என்று தெரிவித்திருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே " நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் " என்று கூறியுள்ளார். ஊழல் உள்ளிட்ட பொதுவான விஷயங்கள் குறித்து பேசி வந்த கமல் தற்போது தமிழக அரசியல் நிலவரங்களிலும் , அன்றாட நிகழ்வுகளிலும் குரல் கொடுக்க துவங்கியிருக்கிறார். குறிப்பாக எதிர்கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சியினரை விட சற்று வேகமாவே அவரது உணர்வு வெளிப்படுவதை காண முடிகிறது. இது அவரது அரசியல் அச்சாரமாக இருக்கக்கூடுமோ என்றும் அறிய முடியவில்லை.மேலும் சில விஷயங்களை கவிதை நயத்துடனும், இலைமறை காயாகவும், சிலேடையாகவும் அவரது டுவிட் இருப்பதால் அரசியல்வாதிகள் , கமல் என்ன சொல்ல போகிறார் என்று விழித்து போய்தான் உள்ளனர்.கமலின் காரசார கருத்துக்கள்; அரசியலுக்கு அச்சாரமா?

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
14-ஆக-201700:08:56 IST Report Abuse
J.Isaac வேறு யாராவுது பேசி இருந்தால் .........
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran - Vizg,இந்தியா
13-ஆக-201723:12:14 IST Report Abuse
Rajasekaran ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரைக்கும் இவர் மவுனமாக இருந்து விட்டு இப்பொழுது ஏன் இப்பொழுது வாய் திறக்கிறார் ஏன் என்றால் இவருக்கு இப்பொழுது மார்க்கெட் இல்லை அது மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் சில திரை உலகினர் வாய்திறக்கினர் உங்களுக்கு இப்பொழுதுதான் மக்கள் மீது ஞானம் பிறந்ததா எல்லாம் நடிப்பே ஏமாறுவார்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுக்கொண்டே இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
13-ஆக-201722:52:33 IST Report Abuse
adalarasan சினிமாவில் இனிமேல் வாய்ப்புக்கள் குறைந்துவிட்டது வேறு தொழில் அரசியல்தான் மிச்சம்? ஏற்கனவே திராவிட இயக்கத்தில் நாட்டம் உள்ளவர், நாத்திக வாதி என்று காண்பித்துக்கொண்டுஇருக்கிறார் பல வருடங்கள்> ஆகையால் இப்பொழுது, அம்மாவும் இல்லை . அய்யாவும் இல்லை? ஒரு சான்ஸ் பார்க்கலாமே? ஆனால் தமிழக மக்கள் இனியும் சினிமாக்காரர்களை நாட்டை ஆள விரும்பமாட்டார்கள் என்று நம்புகிறேன் பார்க்கலாம்?
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201722:49:12 IST Report Abuse
PrasannaKrishnan ShouldhavegutslikeKamaljitotweet.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201722:49:12 IST Report Abuse
PrasannaKrishnan ShouldhavegutslikeKamaljitotweet.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201722:49:12 IST Report Abuse
PrasannaKrishnan ShouldhavegutslikeKamaljitotweet.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201722:49:12 IST Report Abuse
PrasannaKrishnan ShouldhavegutslikeKamaljitotweet.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201722:49:12 IST Report Abuse
PrasannaKrishnan ShouldhavegutslikeKamaljitotweet.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201722:49:12 IST Report Abuse
PrasannaKrishnan ShouldhavegutslikeKamaljitotweet.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201722:49:12 IST Report Abuse
PrasannaKrishnan ShouldhavegutslikeKamaljitotweet.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை