'ஈசி'யாக வெற்றி பெற நினைத்தால் முடியாது..குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்த காயத்ரி கூறுகிறார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஈசி'யாக வெற்றி பெற நினைத்தால் முடியாது..குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்த காயத்ரி கூறுகிறார்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

குரூப் - 1 தேர்வில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்து, மாங்காடு பகுதியை சேர்ந்த, காயத்ரி சுப்ரமணி வெற்றி பெற்றார்.
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 1 தேர்வுக்கு, கடந்த ஆண்டு, முதல் நிலை தேர்வு நடந்தது.துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்கள் என, 74 பணியிடங்களுக்கு, 2.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இதற்கான நேர்முகத்தேர்வு கடந்த, 7 முதல், 11 வரை நடந்தது.இதில், முதன்மை தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை சேர்த்து, அரசு பணியாளர் தேர்வாணையம், 11ல் வெளியிட்டது.அதில், மாங்காடு பகுதியை சேர்ந்த காயத்ரி சுப்ரமணி மாநில அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றார்.
காயத்ரி சுப்ரமணி கூறியதாவது: என் அப்பா கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். கணவர் கார்த்திகேயன் வியாபாரம் செய்கிறார். தர்ஷ்ணாஸ்ரீ, 3, என்ற மகள் இருக்கிறாள்.
கடந்த, 2009ல், பி.இ., முடித்தேன். பள்ளி பருவத்திலே நன்றாக படிப்பேன். என் அப்பா சுப்ரமணி, தான் எனக்கு நன்றாக படிக்க ஊக்கம் அளித்தார்.அந்த ஊக்கம் தான் என்னை, இந்த அளவுக்கு வளர்த்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு, குரூப் - 2ஏ தேர்வில் வெற்றி பெற்றேன். கவுன்சிலிங்கில் கலந்து கொண்டேன்.
குரூப் - 1ல் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்ததால், வேலையில் சேர அவகாசம் கேட்டேன். 2015ல் இருந்து இந்த தேர்வுக்காக படித்து வருகிறேன்.இரு ஆண்டுகளில், இதற்காக, 60 டெஸ்ட்கள் எழுதியுள்ளேன். இந்த தேர்வுக்கான அனைத்து மெட்டீரியல்களும் நான் படித்த மையத்தில் அளித்தனர்.
அதற்காக ஒரு பைசா கூட வாங்க வில்லை. ஒரு நாளைக்கு, 12 மணி நேரம் படிப்பேன். குழந்தையை கவனிக்க கூட நேரமில்லை. என் கணவர் நல்ல ஊக்கத்தை கொடுத்தார்.ஒவ்வொரு மதிப்பெண்களுக்கும் அதற்கான நேரத்திற்குள் எழுத வேண்டும்.இத்தேர்வில் வெற்றி பெற ஈசியாக படிக்க நினைத்தால் முடியாது. தொடர் முயற்சியுடன் ஆர்வமாக படித்தால் தான் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை