குறுவை தொகுப்பு திட்டம் : குழுக்கள் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறுவை தொகுப்பு திட்டம் : குழுக்கள் அமைப்பு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட சாகுபடியை கண்காணிக்க, வேளாண் துறையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேட்டூர் அணை, பாசனத்திற்கு திறக்கப் படாததால், டெல்டா மாவட்டங்களில், ஆறாவது ஆண்டாக, குறுவை பருவ நெல் சாகுபடி இயல்பான அளவில் நடக்கவில்லை. நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்த, 57 கோடி ரூபாயில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது.ஜூனில் செயல்படுத்திய இத்திட்டம் மூலம், 1.60 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மட்டுமின்றி, 1.32 லட்சம் ஏக்கரில் பருப்பு வகைகள் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இடுபொருட்கள் உள்ளிட்ட சலுைககளை பெற்ற விவசாயிகள் பலர், சாகுபடியை செய்யவில்லை என, கூறப்படுகிறது.

இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாகுபடி உதவி பெற்றவர்கள், முறையாக சாகுபடி செய்கின்றனரா என்பதை ஆய்வு செய்ய, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில், மாநில, மாவட்ட வேளாண் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். இதுபற்றிய விபரம், அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இவர்களை தேர்வு செய்த மாவட்ட அதிகாரிகள் மீதும், தேவைப்பட்டால், நடவடிக்கை
எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை