இனியாவது தீ பிடிக்காமல் கட்டடங்கள் தப்புமா?| Dinamalar

இனியாவது தீ பிடிக்காமல் கட்டடங்கள் தப்புமா?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கட்டடங்களுக்கான தீ தடுப்பு விதிமுறைகளை மாற்றி அமைக்க, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் பகுதியில், கட்டடங்களுக்கான புதிய வளர்ச்சி விதிமுறைகள், 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி, சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்களின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும், தீ தடுப்பு வசதிகளுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சென்னையில், சமீபத்தில், வணிக வளாகங்களில் ஏற்பட்ட தீ விபத்து களால், தற்போதுள்ள விதிமுறைகள், காலத்திற்கேற்ப உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய, சமீபத்தில் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம், சமீபத்தில், தலைமை செயலகத்தில் நடந்தது. இதில், விதிமுறைகளை காலத்திற்கேற்ப மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, இத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீ தடுப்பு விதிகளை காலத்திற்கேற்ப மாற்றுவது குறித்து, ஆலோசனை நடந்தது. எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள பகுதிகள் முதலில், பட்டியலிடப்படும். கூடுதல் அதிகாரம், பணியிடங்கள் வழங்கி, தீயணைப்புத் துறை வலிமைப்படுத்தப்படும். கட்டடங்களில், தீ தடுப்பு வசதிகள் குறித்து, ஆண்டு தோறும், மூன்றாம் தரப்பினர் வைத்து, தணிக்கை செய்ய அனுமதிக்கப்படும்.கட்டுமான பொருட்கள் நிலையிலேயே, தீ தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்துவது; தனியார் தீ தடுப்பு பயிற்சி நிறுவனங்களின் ஆலோசனைகளை பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள், படிப்படியாக அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.