பள்ளி உரிமையாளர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை,| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி உரிமையாளர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை,

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டில், 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை, மர்ம நபர்கள் நேற்று கொள்ளை அடித்தனர்.திருக்கழுக்குன்றம், பள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்கனி, 69; ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்.இவர், நேற்று முன்தினம், சொந்த வேலையாக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு, காரைக்கால் சென்றுள்ளார்.இதை நோட்டமிட்ட, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து, வரலட்சுமி நோன்பிற்காக, வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்திருந்த, தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளை அடித்து தப்பினர்.நேற்று மதியம் வீடு திரும்பிய பால்கனி, வீட்டின் பின் கதவு பூட்டு உடைந்திருந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்தார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பூஜை அறையில் உள்ள, 'லாக்கர்' பெட்டி உடைந்திருந்ததை பார்த்து, மேலும் அதிர்ச்சியடைந்தார்.இந்த துணிகர திருட்டில், 200 சவரன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி, நான்கு லட்ச ரூபாய் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்சம்பவ இடத்தில், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானிஆய்வு செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை