பை - பாஸ் சாலையில் மணல்மேடு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பை - பாஸ் சாலையில் மணல்மேடு அகற்றம்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை பை - பாஸ் சாலையில், விபத்துக்களை ஏற்படுத்தும், மைய தடுப்பில் உள்ள மணல் மேடுகளை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.பெருங்களத்துார் - புழல் இடையிலான சென்னை பை - பாஸ் சாலை, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை - திருச்சி, சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், இச்சாலை உருவாக்கப்பட்டு உள்ளது.சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், இச்சாலையில் அதிகளவில் பயணிக்கின்றன. இதனால், அதிக அழுத்தம் காரணமாக, இச்சாலை அடிக்கடி சேதம் அடைகிறது.தற்போது, 40 கோடி ரூபாய் செலவில், இச்சாலையை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இச்சாலையில் அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்துவதற்கு, மைய தடுப்பில் உள்ள மணல் மேடுகள் காரணமாக உள்ளன. சாலையில், 15க்கும் மேற்பட்ட இடங்களில், இதுபோன்ற மணல் மேடுகள் உள்ளன. இவற்றை அகற்றி, மைய தடுப்பின் உயரத்தையும், அகலத்தையும் குறைத்துவிட்டு, சாலையை அகலப்படுத்தும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாலை அமைக்கும்போது, மைய தடுப்பில் அதிகளவு வண்டல் மண்ணை கொட்டி, செடிகளை நட்டுவிட்டனர். இதனால், மழைக்காலங்களில் மைய தடுப்பில் இருந்து, மண் கரைந்து, சாலையில் பரவி விடுகிறது. மணலால், விபத்துகள் நடந்து வந்தன.எனவே, சாலை அமைக்கும் பணியுடன், மணல் மேடுகளை அகற்றும் பணிகளும் நடக்கின்றன. தேவையான இடங்களில் மைய தடுப்பின் அகலம் குறைத்து, சாலை அகல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை