முகமூடி கொள்ளையர் கைவரிசை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகமூடி கொள்ளையர் கைவரிசை

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெற்குன்றம்: நெற்குன்றத்தில், வீட்டில் தனியாக இருந்து பெண் மருத்துவரிடம், கத்தி காட்டி மிரட்டி நகை திருடி சென்ற முகமூடி கொள்ளையரை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்தவர், சுஜாதா, 77. இவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், மருத்துவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் ஆகாத இவர், நெற்குன்றத்தில், தனக்கு சொந்தமான வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார்; கீழ் தளம் காலியாக உள்ளது.இந்நிலையில், நேற்று காலை, இவரது வீட்டிற்கு, முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், கத்திக்காட்டி மிரட்டி, சுஜாதா அணிந்திருந்த, 8 சவரன் நகை மற்றும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தனர்.மேலும், வீட்டில் இருந்த, சி.சி.டி.வி., கேமராவின் இணைப்பை துண்டித்துவிட்டு, காட்சிகள் பதிவாகும், 'ஸ்டோரேஜ் டிவைஸ்' உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.இதுகுறித்து புகாரைஅடுத்து, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை