பேருந்து மீது பைக் மோதல் இரண்டு வாலிபர்கள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேருந்து மீது பைக் மோதல் இரண்டு வாலிபர்கள் பலி

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈஞ்சம்பாக்கம்: அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய விபத்தில், இரண்டு பேர், சம்பவ இடத்திலே பலியாகினர்.சென்னை, திருவான்மியூரில் இருந்து தாம்பரம்நோக்கி சென்ற மாநகர பேருந்து, பயணியரை இறக்க, ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்றது.அப்போது, அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், பேருந்தின் பின்னால் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும், சம்பவ இடத்திலே பலியாகினர். அடையாளம் தெரியாதஇரண்டு பேருக்கும், 30 வயது இருக்கும். வாகனத்தில், ஆவணம் ஏதும் இல்லாததால், பெயர், முகவரி குறித்து தெரியவில்லை.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், இரண்டு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை