தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வியாசர்பாடி: தண்ணீர் லாரி கிளீனர் தாக்கப்பட்டதாக கூறி, வியாசர்பாடி குடிநீரேற்று நிலையம் அருகே, 50க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரிஅருகே செயல்பட்டு வரும், குடிநீரேற்று நிலையத்தில் இருந்து, வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு, லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்செய்யப்படுகிறது.நேற்று மதியம், புளியந்தோப்பு, எம்.எஸ்.முத்து நகரில், குடிநீர் வினியோகித்த, லாரி கிளீனர் பாபு 27, என்பவரை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், தாக்கியதாக கூறப்படுகிறது.இதை அறிந்த, சக லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள், 50க்கும் மேற்பட்டோர், வியாசர்பாடி குடிநீரேற்று நிலையம் அருகே, சாலை மறியல் செய்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த, எம்.கே.பி.நகர் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.சாலை மறியலால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை