காப்பக பயனாளிகளின் உற்பத்தி பொருட்கள் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காப்பக பயனாளிகளின் உற்பத்தி பொருட்கள் விற்பனை

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள நகர்புற வீடற்றோர் காப்பக பயனாளிகளின் உற்பத்தி பொருட்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விற்பனை செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி சுகாதார துறை சார்பில், தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் நகர்புற வீடற்றோருக்கான காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, 37 காப்பகங்களும், 10 சிறப்பு காப்பகங்களும், அரசு மருத்துவமனை காப்பகங்களும் இயங்கி வருகின்றன.ஒவ்வொரு காப்பகத்திலும் ஒரு ஒருங்கிணைப்பாளர், ஆற்றுபடுத்துனர், சமையலர், இரு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் இந்த காப்பகங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், நிலையான வருவாயை உருவாக்கவும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, காலை முதல் மாலை வரை, இந்த பொருட்கள் விற்பனைக்கு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை