பயிர் சாகுபடி : விவசாயிகளுக்கு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் சாகுபடி : விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தோட்டக்கலையில், 'இருமடங்கு உற்பத்தி; மும்மடங்கு லாபம்' என்ற திட்டம், நான்கு ஆண்டுகளாக நடை முறையில் உள்ளது. இதன்படி, காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க, முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. தற்போது, மாநிலத்தில், 34 லட்சம் ஏக்கராக உள்ள, தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை, 39 லட்சம் ஏக்கராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து, தோட்டக் கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு, நீர் தேவை குறைவு. குறிப்பிட்ட காய்கறிகள், பழ வகைகள் சாகுபடி செய்வதால், அதிக லாபம் கிடைக்கும்; தினமும், வருவாய் ஈட்ட முடியும். தற்போது கிடைக்கும் நீரை பயன்படுத்தி சாகுபடி செய்தால், வடகிழக்கு பருவமழைக்குள், மகசூல் கிடைத்து விடும். மழை நேரத்தில், செடிகள் பெரிதாக வளர்ந்து விடும் என்பதால், மழையில் சேதம் அடையாது.
இது குறித்து, வறட்சி யால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆலோ சனை வழங்குமாறு, தோட்டக்கலை இயக் குனர், அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை