விவசாயிகளுக்கு 'வேப்பங்கொட்டை' இனிக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு 'வேப்பங்கொட்டை' இனிக்கிறது

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேனி:தேனி அருகே விவசாயிகளால் சேகரிக்கப்படும் வேப்பங்கொட்டைகள், எண்ணெய் தயாரிக்க, இயற்கை உரமாக, பூச்சி கொல்லியாக பயன்படுகிறது.
வேப்ப மரங்களில் இருந்து வேப்பங்காய்கள் பழுத்து ஆனி, ஆடி மாதங்களில் உதிர்ந்து விழும். இவை அதிகம் தேனி, ஆண்டிப்பட்டி, தாடிச்சேரி, தப்புக்குண்டு போன்ற பகுதிகளில் விவசாயிகளால் சேகரிக்கப்படுகிறது. கிலோ ரூ.41 க்கு, சேகரிப்பவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. டன் கணக்கில் சேகரிக்கப்படும் வேப்பங்கொட்டைகளைக்கொண்டு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் சக்கையை உலர வைத்து, பயிர்களுக்கு உரமாக வைப்பதால் வேர்ப் பூச்சிகள் போன்ற பூச்சி கொல்லிகள் பயிரை தாக்காமல் இருக்கிறது. இவை உரமாக இருந்து பயிருக்கு தழைச் சத்தை கொடுக்கிறது. எண்ணெய் எடுக்கப்பட்ட சக்கை கிலோ ரூ. 25 , எண்ணெய் எடுக்காமல் அரைக்கப்படும் பவுடர் கிலோ ரூ. 45 க்கு விற்கப்படுகிறது. வேப்பங்கொட்டைகள் சேகரிப்பதால், விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதுடன், விவசாய பயிர்களுக்கு இயற்கையான உரமும் கிடைக்கிறது. இதனால் விளைச்சல் அதிகரித்து விவசாயம் வளர்ச்சியடையும். மண் புழுவை போன்று வேப்பங்கொட்டையும் விவசாயிகளுக்கு தோழனாக இருக்கிறது.
நாகலாபுரம் செக் ஆயில் மில் உரிமையாளர் ரமேஷ் கூறியதாவது: சேகரிக்கப்படும் வேப்பங்கொட்கைள் தரம் பிரித்து நன்றாக காயவைக்கப்படும். பின்னர் ஓடுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருக்கும் காய்கள் உலர்த்தப்படும். செக்கில் போட்டு எண்ணெய் எடுத்தபின் சக்கைகள் உலர்த்தப்பட்டு, <உரமாக விற்பனை செய்துவருகிறோம். இதை யூரியாவோடு கலந்து பயிர்களுக்கு வைக்கவேண்டும். 1 லிட்டர் எண்ணெய் தயாரிக்க, 3 கிலோ வேப்பங்கொட்டை தேவைப்படும். இதில் வெல்லம் சேர்த்தால், அதிக வேப்ப எண்ணெய் கிடைக்கும். பல இடங்களில் எண்ணெய் அதிகமாக கிடைக்க ரசாயனம் கலக்கின்றனர். இதிலிருந்து கிடைக்கும் உரத்தாலும் பயிர்களுக்கு பாதிப்பு உண்டாகும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை