மழைநீரை வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழைநீரை வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'சென்னையில், தேங்கிஇருக்கும் மழைநீரை, மாநகராட்சி உதவியுடன் போலீசார் வெளியேற்ற வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.சென்னையில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், மழை வலுவாக பெய்ததால், சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.சென்னையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால், தேங்கிஇருக்கும் மழைநீரை வெளியேற்ற, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, போலீஸ் உதவி கமிஷனர்கள் கூறியதாவது:மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை ஆய்வு செய்ய, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், சிறப்பு ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி இருந்தால், மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன், நீரை வெளியேற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை