பெற்றோர் கண் முன் கல்லூரி மாணவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் கண் முன் கல்லூரி மாணவன் பலி

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கானத்துார் : பெற்றோர் கண் முன், கடலில் குளித்த கல்லுாரி மாணவன், அலையில் சிக்கி பலியானார்.கொடைக்கானலைச் சேர்ந்தவர், அஷ்ரப், 20. இவரதுநண்பர் ஆரவ், 20. இவர்கள், சோழிங்கநல்லுாரில் தங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரில், இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் மாலை, அஷ்ரப் மற்றும் அவரது பெற்றோர், ஆரவுடன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு மையத்திற்கு சென்றுவிட்டு, கானாத்துார் கடற்கரைக்கு சென்றனர்.அஷ்ரப், ஆரவ் இருவரும், கடலில் குளித்தனர். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில், அஷ்ரப் சிக்கினார். அவரை, மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.சிறிது நேரத்தில், மயங்கிய நிலையில், அஷ்ரப் கரை ஒதுங்கினார். பெற்றோர் மற்றும் அருகிலிருந்தோர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், அஷ்ரப் பலியானார்.கானாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை