தொல்லியல் துறைக்கு சி.எம்.டி.ஏ., கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் துறைக்கு சி.எம்.டி.ஏ., கடிதம்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வண்டலுார் கிளாம்பாக்கத்தில், முதுமக்கள் தாழி இருப்பதாக கூறப்படும் பகுதியை ஒட்டி, புதிய பேருந்து நிலைய பணிகளை மேற்கொள்வதற்காக, வழிகாட்டுதல்களை வழங்குமாறு, தொல்லியல் துறைக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., கடிதம் எழுதி உள்ளது.சென்னை நகருக்குள், வெளியூர் பேருந்துகள் வருவதால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார், கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கரில், புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து பெறப்பட்ட பகுதியில், முதுமக்கள் தாழி உள்ளதாக, தொல்லியல் துறை கூறி வருகிறது.இதனால், குறிப்பிட்ட சில சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களில், கட்டுமான பணிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலைய திட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:முதுமக்கள் தாழி இருப்பதாக கூறப்படும் பகுதிக்கு அருகில், புதிய கட்டுமான பணிகளை எந்த அளவுக்கு மேற்கொள்ளலாம், இதற்கான நடைமுறை என்ன என்பது குறித்து, தொல்லியல் துறையின் ஆலோசனை தேவை.இது குறித்து, உரிய வழிகாட்டுதல்கள் வழங்குமாறு, தொல்லியல் துறைக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடிதம் எழுதி கேட்டுள்ளனர். தொல்லியல் துறை பதில் அடிப்படையில், அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை