ஓட்டுனரை தாக்கி கார் கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுனரை தாக்கி கார் கடத்தல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அம்பத்துார்: காவல் நிலையம் அருகே, ஓட்டுனரை தாக்கிய மர்மநபர்கள், அவரது காரை கடத்திச் சென்றனர்.சென்னை, வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியைச் சேர்ந்தவர் சாகுல் அமீது, 38; தன் சொந்த, 'ஸ்விப்ட் டிசைர்' காரை, தனியார் நிறுவனங்களுக்காக ஓட்டி வருகிறார்.நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், அம்பத்துார் தொழிற்பேட்டை காவல் நிலையம் அருகே, ஆம்பிட் பூங்கா சாலையில் காரை நிறுத்தி, அதில் துாங்கினார். அங்கு வந்த முன்று மர்மநபர்கள், 'கொரட்டூர், 200 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்' என, சாகுலிடம் கேட்டுள்ளனர். சாகுல், அவர்களை காரில் அழைத்துச் சென்றார்.அம்பத்துார் காவல் நிலையம் அருகே, சாகுலை மிரட்டிய மர்மநபர்கள், அவரிடம் இருந்து மொபைல்போன், 2,000 ரூபாய் பறித்தனர்; தொடர்ந்து, சாகுலை கீழே தள்ளி விட்டு, காரை கடத்திச் சென்றனர்.இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை