சென்னை மாநகராட்சி பள்ளியில் உ.பி., மாணவிக்கு இடம் மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி பள்ளியில் உ.பி., மாணவிக்கு இடம் மறுப்பு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற, உத்தர பிரதேச மாணவிக்கு, பிளஸ் 1 வகுப்பில், ஆங்கில வழி கல்வியில் இடம் தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், பஷ்ஷி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்சந்த். இவர், தன் குடும்பத்துடன், 13 ஆண்டுகளாக, சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.ஷெனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவரது மகள் ரூபா திவாரி, கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 265 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க விரும்பிய ரூபா திவாரி, ஆங்கில வழிக்கல்வியில், பிளஸ் 1 கணினி அறிவியல் பிரிவில் இடம் கேட்டார். ஆனால், குறைவான மதிப்பெண் பெற்றிருப்பதால் இடம் தர முடியாது; தமிழ் வழிக்கல்வியில், 'ஹோம் சயின்ஸ்' இடம் தருவதாக, மாநகராட்சி பள்ளி சார்பில் கூறப்பட்டுள்ளது.'தமிழ் பேச, எழுத தெரிந்தாலும், தமிழ் வழிக்கல்வியில் படிப்பது சிரமம்' என, ரூபா திவாரி, ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்; ஆனாலும், ஆங்கில வழிக்கல்வியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், பிளஸ் 1ல் சேர முடியாமல், வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.வீடு வீடாக ஆய்வு நடத்தி, பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, மாநகராட்சி பள்ளியில் சேர்க்கும் மாநகராட்சி நிர்வாகம், வட மாநில மாணவியை, தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்துவது நியாயமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மாநகராட்சி கமிஷனர்கார்த்திகேயன் தலையிட்டு, தன் மகள் விரும்பிய பாடத்தை படிக்க உதவ வேண்டும் என, மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை