இந்திய பெண்கள் சங்க குறும்பட, 'சிடி' வெளியீடு| Dinamalar

இந்திய பெண்கள் சங்க குறும்பட, 'சிடி' வெளியீடு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : இந்திய பெண்கள் சங்க வரலாறு குறித்த குறும்பட, 'சிடி'யை, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.இந்திய பெண்கள் சங்கமான, டபிள்யூ.ஐ.ஏ., துவங்கி, 100 ஆண்டுகள் ஆகின்றன. நுாற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய பெண்கள் சங்க வரலாறு, குறும்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.குறும்பட, 'சிடி' வெளியீட்டு விழா, சென்னை, சி.பி.ராமசாமி அய்யர் அறக்கட்டளை நிறுவன வளாகத்தில், நேற்று நடந்தது.மத்திய தொழில் மற்றும்வர்த்தகத் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன், 'சிடி'யை வெளியிட்டார். சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய தலைவர், டாக்டர் சாந்தா பெற்றுக் கொண்டார்.அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ''பெண்களின் முன்னேற்றத்துக்காக, இந்திய பெண்கள் சங்கத்திற்கு, மத்திய அரசு அனைத்து உதவியையும் வழங்க தயாராக உள்ளது,'' என்றார்.இதில், சங்கத்தின் தலைவர், பத்மா வெங்கட்ராமன் வரவேற்றார். கிருஷ்ணசாமி அறக்கட்டளை இயக்குனர் லதா கிருஷ்ணா, இந்திய பெண்கள் சங்க புரவலர் நந்திதா கிருஷ்ணா, கவுரவ செயலர், பார்கவி தேவேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.