'திறமையாளர்களை மதிக்கும் போக்கு குறைந்து வருகிறது'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'திறமையாளர்களை மதிக்கும் போக்கு குறைந்து வருகிறது'

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : ''திறமையாளர்களை மதிக்கும் போக்கு, குறைந்து வருகிறது,'' என, சென்னை பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், 'அறவாணர் சாதனை விருது - 2016' வழங்கும் விழா மற்றும் நுால்கள் வெளியீட்டு விழா, சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது.இதில், வே.திருநாவுக்கரசு எழுதிய, 'சுற்றுலாவில்வேலைவாய்ப்பு, சுற்றுலாகளஞ்சியம், இலக்கியத்தில் சுற்றுலா' ஆகிய நுால்களும், வாணி அறிவாளன் எழுதிய, 'செவ்விலக்கியப் புரிதல்கள்' நுால், க.ப.அறவாணன் எழுதிய, 'கூவாய் குறளே, தமிழர் சமூகம்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.பதிப்பாளர் காவ்யா சண்முகசுந்தரம், புதுவை பல்கலை அலுவலர், பழ.முருகப்பன் ஆகியோருக்கு, அறவாணர் சாதனை விருது வழங்கப்பட்டது.விருதுகளை வழங்கி, சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர், தாண்டவன் பேசியதாவது:க.ப.அறவாணன் சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர்; சிந்தனையாளர். அவரை, சிறிய அமைப்புகள் அழைத்தால் கூட, அரை மணி நேரத்திற்கு முன் சென்று காத்திருக்கும் கடமையாளர். அவர் நடத்தும் விழாவில், முக்கிய நபர் வராவிட்டாலும், குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை துவக்கி விடுவார். அவர், சிறந்த தமிழ் உணர்வாளர். அவரிடம், நான் தமிழ் கற்றேன். பல மொழிகளை தெரிந்த அவர், 120 நுால்களை எழுதி உள்ளார்.மேலும் பல துறை அறிவு பெற்றதனால் தான், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் துணைவேந்தராக உயர்ந்தார்.தற்போது, திறமையாளரை மதிக்காத போக்கு நிலவுகிறது. ஆனால், அறவாணன், தன் குருவுக்கும், தனக்கும் தனி செயலராக பணி புரிந்த, பழ.முருகப்பன் போன்றோருக்கும், விருது அளித்து கவுரவப்படுத்தி வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், பேராசிரியர், தமிழ் அறிஞர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை