40 ஆண்டுக்கு பின் சந்தித்த நண்பர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

40 ஆண்டுக்கு பின் சந்தித்த நண்பர்கள்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நண்பர்கள், Friends, நாகர்கோவில், Nagercoil, எஸ்.எல்.பி. பள்ளி, , SLB School, மாணவர்கள், Students, சிங்கப்பூர், Singapore, சென்னை, Chennai, திருவனந்தபுரம் , Trivandrum, ஆசிரியர்கள், Teachers, கிருஷ்ணன்,  Krishnan, ஜஸ்டஸ், Jestas, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் , School Headmaster  Vijayan,

நாகர்கோவில்: நாகர்கோவில், எஸ்.எல்.பி. பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்தித்து, பழைய நினைவுகளை அசை போட்டனர். நாகர்கோவில், எஸ்.எல்.பி. பள்ளியில், 1972 முதல், 1978ம் ஆண்டு வரை, 'ஏ' பிரிவில் படித்த, 40 மாணவர்கள், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
இவர்கள், மீண்டும் தாங்கள் படித்த வகுப்பறையில் சந்திக்க முடிவு செய்தனர். இதன் அடிப்படையில், 12ம் தேதி, இவர்களில், 26 பேர், எஸ்.எல்.பி., பள்ளியில், தங்கள் வகுப்பறையில் கூடினர்.
படித்த காலத்தில் செய்த சேட்டைகளைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், தங்கள் வாழ்க்கை
யில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முக்கிய நிகழ்வுகள், செய்யும் பணி ஆகியவற்றை பகிர்ந்து
கொண்டனர்.மேலும், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களான கிருஷ்ணன், ஜஸ்டஸ் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை