சி.எம்.டி.ஏ., வாகன பயன்பாட்டில் முறைகேடு; ஆவணங்களை தோண்டும் தணிக்கை துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ., வாகன பயன்பாட்டில் முறைகேடு; ஆவணங்களை தோண்டும் தணிக்கை துறை

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், அதிகாரிகள், வாகனங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது குறித்த ஆவணங்களை, கணக்கு தணிக்கை துறைக்கு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
சி.எம்.டி.ஏ.,வில் துணை திட்ட அதிகாரிகளுக்கு மேல் உள்ள, 38 அதிகாரிகளுக்கு, அலுவலகம் வந்து செல்ல மற்றும் ஆய்வுக்கு செல்வதற்காக, வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், 65 கார்கள் பயன்பாட்டில் உள்ளன; பழைய கார்களை பயன்பாட்டில் இருந்து விடுக்காமல், புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இது தவிர, 20 வாடகை கார்களும் பயன்படுத்தப்படுகின்றன.அதிகாரிகளு வாகனங்கள் ஒதுக்குவது மற்றும் அதற்கான பராமரிப்பு செலவுகளை கவனிக்கும் பொறுப்பு, நிர்வாக பிரிவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் உள்ள சில அதிகாரிகள், வாகன வசதியை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு, அவர்கள் செய்யும் செலவுகளை தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தாததே காரணம் என, கூறப்பட்டது. இந்நிலையில், சி.எம்.டி.ஏ.,வின் நிதி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் மத்திய கணக்கு தணிக்கை துறை, வாகன வசதி முறைகேடுகளை விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சி.எம்.டி.ஏ.,வில் வாகனங்கள் பயன்படுத்துவது தொடர்பான, 'லாக் புக்' உள்ளிட்ட ஆவணங்களை, கணக்கு தணிக்கை துறையிடம் தாக்கல் செய்ய, உறுப்பினர் செயலர் விஜயராஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை