'பேஸ்புக்'கில் காதலி படம் வெளியிட்ட வாலிபன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பேஸ்புக்'கில் காதலி படம் வெளியிட்ட வாலிபன் கைது

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வளசரவாக்கம்: காதலியின் புகைப்படங்களை, சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில் வெளியிட்டு மிரட்டிய வாலிபனை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, வளசரவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த, 23 வயது இளம்பெண், தி.நகரில் உள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். அவர், தன்னுடன் பணிபுரிந்த, துாத்துக்குடி,தட்டார்மடம் பகுதியைச்சேர்ந்த, அந்தோணி ராஜேஷ்குமார், 32, என்பவனை காதலித்தார்.இவர்களின் திருமணத்திற்கு, பெண்ணின் பெற்றோர் சம்மதித்து, அந்தோணி குறித்து விசாரித்தனர். இதில், அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தை உள்ளது தெரியவந்தது.இதையடுத்து, அந்தோணியுடன் பேசுவதை, அந்த பெண் தவிர்த்தார். அந்தோணியும், கோவையில் உள்ள பாத்திரக்கடையில் பணிக்கு சேர்ந்தான். இந்நிலையில், அந்த பெண்ணிற்கு, மாப்பிள்ளை பார்க்க துவங்கினர். இதையறிந்த அந்தோணி, காதலித்த போது எடுத்த படங்களை, பேஸ்புக்கில் வெளியிட்டான். இதுகுறித்த புகாரையடுத்து, வளசரவாக்கம் போலீசார், அந்தோணியை நேற்று கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை