சாலை தடுப்பில் மோதிய டேங்கர் லாரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை தடுப்பில் மோதிய டேங்கர் லாரி

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்குன்றம்: சமையல் எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி, சாலை தடுப்பில் மோதியது.சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் கிடங்கில் இருந்து, நேற்று காலை, 11:00 மணியளவில், டேங்கர் லாரி மூலம், 20 டன் சமையல் எண்ணெய், கும்மிடிப்பூண்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.லாரியை, திருநெல்வேலியைச் சேர்ந்த சிவக்குமார், 27, என்பவர் ஓட்டினார். செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் சிக்னல் அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக, சாலையின் குறுக்கே மாடு ஒன்று ஓடியது.இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பில் மோதியது. லாரியின் டீசல் டேங்க் உடைந்து, எரிபொருள் மொத்தமாக வெளியேறி, தீ பிடித்தது. லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்; இதனால், பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை