உறைகிணறு அருகே இறந்த நாய் சுகாதாரத்துறையினர் ஆய்வில் அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உறைகிணறு அருகே இறந்த நாய் சுகாதாரத்துறையினர் ஆய்வில் அகற்றம்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கம்பம்:சுருளிப்பட்டி முல்லையாற்றில் உறைகிணறு அருகே இறந்து மிதந்த நாயை, சுகாதாரத்துறையினர் ஆய்வின் மூலம் கண்டறிந்து அகற்றப்பட் டது. இதனால் மாவட்ட நிர்வாகம் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் பல்வேறு கள ஆய்வு, மற்றும் டெங்கு ஒழிப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக அரசு ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள் கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தருகின்றனர். இதுதவிர விழிப்புணர்வு பிரசாரங்களும் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில் நேற்று முன்தினம் சுருளிப்பட்டியில் கோம்பை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் வசந்தி, சித்தா டாக்டர் சிராசுதீன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.அப்போது அங்குள்ள பள்ளி வளாகங்களில் டெங்குவை பரப்பும் 'லார்வா'க்கள் உள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து முல்லையாற்றில் குடிநீர் நீரேற்றும் நிலைய பகுதிகளை ஆய்வு செய்தனர். பின், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றைச் சுற்றி தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் இருந்ததை கண்டறிந்தனர்.அழுகிய நாய்: மேலும் நாய் ஒன்று இறந்த நிலையில் அழுகிய நிலையில் அந்த தண்ணீருக்குள் மிதந்தது. இதைப் பார்த்த டாக்டர்கள் குழு அதிர்ச்சியடைந்தது. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊராட்சிசெயலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், தண்ணீருக்குள் மிதந்து கொண்டிருந்த இறந்த நாய் அகற்றப்பட்ட, பின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.ஊராட்சி மக்கள் கூறுகையில், ''ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தங்களின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து இதுபோன்ற ஆய்வுகளை அடிக்கடி மேற்கொள்வது அவசியம். அப்போது தான் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தமுடியும், என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை