வாடகை தாய் சட்டம்; பார்லி., குழு அதிருப்தி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வாடகை தாய் சட்டம்; பார்லி., குழு அதிருப்தி

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வாடகை தாய் சட்டம், Rent Mother Act,பார்லிமென்ட் குழு,  Parliamentary Committee, அதிருப்தி,Disappointment,புதுடில்லி, New Delhi, குழந்தை,   Child, திருமணம் , Marriage, கர்ப்பப்பை ,uterus,   குழந்தைப்பேறு தொழில்நுட்ப சட்டம், Childcare Technology Act,வாடகை தாய், Rental Mother,

புதுடில்லி: 'திருமணமாகி ஐந்து ஆண்டுக்கு பின்பே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்பதை, ஓராண்டாக மாற்ற வேண்டும்' என, பார்லிமென்ட் குழு கூறியுள்ளது.

பல்வேறு காரணங்களால் குழந்தைப் பேறு இல்லாதவர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பது வர்த்தகமயமாகி உள்ளது. அதனால், இதில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், வாடகைத் தாய் கட்டுப்பாட்டு மசோதா, பார்லிமென்ட்டில் நிறைவேறியது. இந்த மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலைக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆய்வு, ஆலோசனை நடத்திய பின், தன் அறிக்கையை தயார் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருமணமாகி ஐந்து ஆண்டுக்குப் பின்பே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்பது, மிக நீண்ட காலமாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில், மிகவும் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். இது போன்றவர்கள், நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

வாடகைத்தாய் முறையில் மாற்றம்; பார்லி குழு பரிந்துரை

அதனால், திருமணமாகி, ஓராண்டுக்கு பின், வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதிக்கலாம். கர்ப்பப்பை அகற்றப்படுவது போன்ற சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், எந்தக் கால கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. வாடகைத் தாய் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், மாற்று உதவியுடன் குழந்தைப்பேறு தொழில்நுட்ப சட்டத்தை முதலில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
14-ஆக-201716:20:58 IST Report Abuse
Naam thamilar இந்த கேடு கெட்ட அரசு வாடகை தாயுக்கும் கிஸ்தி போடுவானுங்க. தூ
Rate this:
Share this comment
Cancel
14-ஆக-201711:46:11 IST Report Abuse
அப்பாவி அதனால் என்ன? ஒரு 50% GST கட்டச் சொல்லுங்க...எல்லாம் சரியாகி விடும்...
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
14-ஆக-201710:56:08 IST Report Abuse
R Sanjay அடப்பாவிங்களா எந்த ஒரு அரசியல்வியாதிகளின் குடும்பம் தங்களுக்கு குழந்தை இல்லை என்று test tube baby இல்லன்னா வாடகை தாய்க்காக HOSPITAL வாசலில் காத்து இருக்கிறார்கள்? அப்படி நிற்பவர்கள் எல்லாருமே சாதாரண பொது மக்கள் தான். தரமற்ற எண்ணையை REFINED ஆயில் என்று சொல்லி மருத்துவர்கள் நடிகை நடிகர்களின் மூலம் இந்த REFINED ஆயிலை ரொம்ப நல்ல எண்ணெய் என்று கூறி மக்கள் தலையில் மிளகாய் அரைத்து எல்லாரையுமே REFINED ஆயிலை உபயோகப்படுத்தவைத்தனர் இந்த அரசியல்வியாதிகள். மேலும் 35 நாட்களில் அதிகமான மருந்துகளை உபயோகப்படுத்தி அதிவேகத்தில் வளரக்கூடிய ஒரு கோழியை உருவாக்கி "பிராய்லர் கோழி என்ற ஒரு மோசமான உணவை மக்களிடம் கொண்டுபோய் செய்துவிட்டனர். இருக்கும் அனைத்து காய்கறிகளிலும் கெட்டுப்போகாமல் இருக்க பூச்சி மருந்து தெளித்து சந்தை படுத்திவிட்டனர். இந்த காய் கரி வியாபாரிகளிடம் இருக்கும் காய்கள் பலநாள் ஆனாலும் காய் காயாகவே இருக்கும் பழம் பழமாகவே இருக்கும். மக்கள் இது போன்று சந்தைப்படுத்தப்பட்ட மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உணவுச்சங்களிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டனர். இந்த உணவுச்சங்களிக்குள்ள இருக்கும் உணவை சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பையில் ஆயிரம் பிரச்சனைகளை உருவாக்கி இன்று பல ஆயிரம் UN-FERTILITY எனப்படும் குழந்தையின்மை சிகிச்சை மைய்யங்களை பல லட்சம் கொட்டி செலவு செய்ய மக்கள் தேடி ஓட ஆரம்பித்துவிட்டனர். எல்லாம் முக அரசியலை பார்த்து நாம் போட்ட ஒரு ஓட்டு இன்று நம்மை இப்படி சீரழித்துவிட்டது. மேல் நாட்டு கலாச்சாரத்தை கைவிட்டுவிட்டு நம் பாரம்பரியமே சிறந்தது என்று உயர்வான எண்ணத்தை நமக்குள் விதைத்து மக்கள் மீண்டும் இயற்க்கைக்கு திரும்புவது ஒன்று தான் நம்மை சீர்ப்படுத்தும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை