லாரி மீது வேன் மோதல்:கணவன், மனைவி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது வேன் மோதல்:கணவன், மனைவி பலி

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடைரோடு:கொடைரோடு அருகே கன்டெய்னர் லாரி மீது வேன் மோதியதில், கணவன், மனைவி பலியாகினர்.மதுரை அருகே சூலமங்கலத்தைச்சேர்ந்த டிரைவர் சவுந்தரபாண்டி, 38. மனைவி முத்துலட்சுமி, 32, மகன் ரோகித்குமார், 10, கீர்த்தனா, 8, ஆகியோருடன், திருப்பூர் செல்லம் நகரில் வசித்து வருகின்றனர். பள்ளி விடுமுறை காரணமாக, குடும்பத்தினருடன் சூலமங்கலத்திற்கு ஆம்னி வேனில் புறப்பட்டனர். சவுந்தரபாண்டி வேனை ஓட்டி வந்தார்.திண்டுக்கல்--மதுரை நான்கு வழிச்சாலையில், அதிகாலை 4 மணிக்கு நாகையகவுண்டன்பட்டி விலக்கு அருகே, மதுரை விமான நிலையம் நோக்கி சென்ற சைலோ கார் முந்திச்செல்ல முயன்றது. இயலாததால் ஆம்னிவேனின் பின்பகுதியில் மோதி ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்தது.நிலை குலைந்த ஆம்னிவேன், ரோட்டோரத்தில் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதி யது. இதில் வேனின் இருந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். சவுந்தரபாண்டி, சிகிச்சைக்காக திண்டுக்கல் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பின்புறத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள் ரோகித்குமார், கீர்த்தனா காயங்களுடன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சைலோ கார் ஓட்டி வந்த நாமக்கல்லைச்சேர்ந்த திருநாவுக்கரசு, 31,விடம், அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை